முன்னதாக இந்த வருட தொடக்கத்தில் ,மகேந்திர சிங் டோனி அணி தலைமை பொறுப்பில் இருந்து விலகினார் . இந்தியா அணியின் ஒரு நாள் போட்டி -ன் தலைமை பொறுப்பை விராட் கோஹ்லி உடன் ஒப்படைத்தார் . தோனி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாலும் அவருடைய பங்களிப்பை நம்மால் பாக்க முடிந்தது .
டி ஆர் ஸ் தொடங்கி பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் மாற்றதிலும் டோனி -ன் பங்களிப்பு இருந்தது . அண்மையில் பங்களாதேஷ் அணி -கு எதிராக நடந்த டோனி -ன் பந்து வீச்சு மாற்றம் கேதார் ஜாதவ் -ஐ பந்து வீச அழைத்தது மிக பெரிய திருப்பு முனை ஆக இருந்தது அதை யாராலும் மறக்க முடியாது . இதை குறித்து விராட் கோஹ்லியும் தனது கருத்தை தெரிவித்து இருந்தார் .
” இந்த பந்து வீச்சு மாற்றதின் முழு புகழை நான் மட்டும் எடுத்து கொள்ள மாட்டேன் , நான் டோனி -இடம் கேட்ட போது நாங்கள் இரண்டு பேரும் முடிவு செய்தோம் கேதார் ஜாதவ் -ஐ பந்து வீச அழைப்பது நல்லது என்று . கேதார் ஜாதவ் அருமையாக வீசினார் ” கோஹ்லி வெற்றி -இக்கு பிறகு இப்படி தெரிவித்து இருந்தார் .
இந்தியா கிரிக்கெட் அணியின் மட்டை வீச்சுக்கறார் அஜிங்க்ய ரஹானே டோனி-இன் பங்களிப்பு விராட் கோஹ்லி -இன் வேலை -ஐ மிகவும் எளிதாக்கிறது தனது கருத்தை வெளியிட்டு உள்ளார் . இந்திய அணி மகேந்திர சிங் தோனி -ஐ கொண்டிருப்பது மிகவும் அதிஷ்டமானது என்றும், மற்றும் மகேந்திர சிங் தோனி அணியில் இருப்பது அணி தலைவர் விராட் கோஹ்லி -இன் வேலையை எளிதாக்கிறது எனவும் தெரிவித்து உள்ளார் .
” டோனி -ஐ கொண்டிருப்பது மிகவும் நல்லது , நாங்கள் அதிஷ்டசாலிகள் டோனி -ஐ இந்திய அணியில் கொண்டிருப்பதற்கு . டோனி-இன் பங்களிப்பு விராட் கோஹ்லி -இன் வேலை -ஐ மிகவும் எளிதாக்கிறது . அதிகமா கோஹ்லி தோனி-இன் கருத்தை கேட்டு நல்ல யோசனை- உடன் வருவதை பார்க்க முடிகிறது . இருவரும்சேர்ந்து வேலை செய்வது பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது ” அஜிங்க்ய ரஹானே இந்தியா டுடே பேட்டியில் கூறியுள்ளார் .
மேலும் ரஹானே , விராட் கோஹ்லி -இன் ஆதரவு மேற்கு இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாட உதவிபுரிந்ததாகவும் ,விராட் கோஹ்லி -இன் ஆலோசனை தன்னை மிகவும் நம்பிக்கையுடன் விளையாட உதவிபுரிந்ததாகவும் கூறினார் . வலது கை மட்டை வீச்சு காரர் ஆன அஜிங்க்ய ரஹானே சாம்பியன்ஸ் ட்ரோபி 2017 தொடரில் ஒரு போட்டி கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை அது ரஹானே -கு மிகவும் பின்னடைவாக அமைந்தது .
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக மேற்கு இந்திய சுற்று பயணத்தில் பங்கேற்காததினால் அஜிங்க்ய ரஹானே -கு வாய்ப்பு கிடைத்தது .மேற்கு இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரஹானே -தான் அதிக ரன்களை குவித்தார் ,336 ரன்களை 3 அரை சதம் மற்றும் ஒரு சதம் -களின் உதவியுடன் குவித்தார் .
” விராட் என்னிடத்தில் மேற்கு இந்தியாவில் , என்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தவும் , அழுத்தத்தை எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் சொன்னார் மற்றும் நீ தான் சிறந்த ஆட்டக்காரர் உனக்கு தெரியும் எப்படி நிலைமை -ஐ கையாள்வது என தெரியும் . அணி தலைவர் உன்னை சுதந்திரமாக விளையாட அனுமதித்து மற்றும் நான் உன்னை ஆதரிக்கிறேன் , இந்திய அணி உன்னோடு இருக்கிறது , என்று சொல்லும் போது வேறு என்ன வேணும் ” மும்பை நட்சத்திர வீரர் கூறினார் .