இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் மது விவகாரத்தில் சிக்கிய நிலையில், தற்போது பென் டக்கெட் என்ற வீரர் இதே விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து அணி சமீபத்தில் மது விவகாரத்தில் சிக்கி தவிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றபின், இங்கிலாந்து வீரர்கள் சில இரவு விடுதி கிளப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட தகராறில் பென் ஸ்டோக்ஸ் வாலிபர் ஒருவர் மீது தாக்கியதாக போலீசார் கைது செய்தனர்.
இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் என்ற வீரருக்கும் தொடர்பு என்று கூறப்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி இரண்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன் அலெக்ஸ் ஹேல்ஸ் மீது கிரிமினல் நடவடிக்கை இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹேல்ஸ் இடம்பிடித்துள்ளார்.
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிற்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பான்கிராப்ட் ஆகியோருக்கு இடையிலான தகராறில் தலையைால் முட்டியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர் மீது மதுவை ஊற்றியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முடிவில் இது நடந்துள்ளது. ஆனால் வன்முறை ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு தொடரும் அளவிற்கு பிரச்சினை ஏற்படவில்லை.

இருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் டக்ககெட்டை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இங்கிலாந்து லெவன் அணி ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து லெவன் அணியில் இருந்து பென் டக்கெட் நீக்கப்பட்டு ஜோ கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.