உலக்கோப்பை வென்று கொடுத்த நியுஸிலாந்து வீரருக்கு ''நைவுட்'' பட்டம் கொடுக்கும் இங்கிலாந்து!! 1
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முன்னேறின.  இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது.  இதனால் இங்கிலாந்து வெற்றி பெற 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில், கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. இங்கிலாந்தின் கைவசம் 2 விக்கெட் இருந்தது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் இறுதி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். முதல் 2 பந்துகளில் ரன் அடிக்காத பென் ஸ்டோக்ஸ் 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 4வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன் ஓடி எடுத்த போது அவரை ரன்-அவுட் ஆக்க நியூசிலாந்து பீல்டர் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.  எதிர்பாராதவிதமாக பந்து பென் ஸ்டோக்சின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. இதனால் கூடுதலாக 4 ரன் வழங்கப்பட்டது. இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. இதன் பின்னர் 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஸ்டோக்ஸ் 2வது ரன்னுக்கு ஓடிய போது எதிர்முனையில் நின்ற அடில் ரஷித் ரன்-அவுட் ஆனார்.உலக்கோப்பை வென்று கொடுத்த நியுஸிலாந்து வீரருக்கு ''நைவுட்'' பட்டம் கொடுக்கும் இங்கிலாந்து!! 2
இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தது.  இறுதி பந்தை தட்டிவிட்டு பென் ஸ்டோக்ஸ் வேகமாக ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2வது ரன்னுக்கு திரும்பிய போது மார்க்வுட் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து திரிலிங்கான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது. இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.
உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டம் டையில் முடிந்தது இதுவே முதல் நிகழ்வாகும். இதையடுத்து உலக சாம்பியன் யார்? என்பதை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் பந்து வீசினார். இதில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்-ஜோஸ் பட்லர் கூட்டணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.உலக்கோப்பை வென்று கொடுத்த நியுஸிலாந்து வீரருக்கு ''நைவுட்'' பட்டம் கொடுக்கும் இங்கிலாந்து!! 3

இதன் பின்னர் சூப்பர் ஓவரில் 16 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து ஆடியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங் செய்தார். முதல் 5 பந்தில் 14 ரன் எடுத்த நியூசிலாந்துக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஆனால் இந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்-அவுட் செய்யப்பட்டார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்தும் 15 ரன் எடுத்ததால் மீண்டும் டை ஆனது.
போட்டி 2-வது முறையாகவும் டை ஆகும் பட்சத்தில் ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். அந்த வகையில் நியூசிலாந்தை விட இங்கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் அந்த நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் தெரசா மே இந்த மாத இறுதியில் விடை பெறும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களான போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரேமி ஹன்ட் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டனர்.  இதில், பென் ஸ்டோக்சுக்கு வீரத்திருமகன் அந்தஸ்து வழங்கப்படுமா? என கேட்டதற்கு இருவரும் ஆம் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.உலக்கோப்பை வென்று கொடுத்த நியுஸிலாந்து வீரருக்கு ''நைவுட்'' பட்டம் கொடுக்கும் இங்கிலாந்து!! 4
கிரிக்கெட் விளையாட்டில் சிறப்புடன் பங்காற்றியதற்காக இதுவரை 11 இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வீரத்திருமகன் (நைட்வுட்) அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.  சமீபத்தில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்புடன் செயலாற்றியதற்காக சர் அலெஸ்டைர் குக் இந்த கவுரவம் பெற்றார்.  இந்த அந்தஸ்து பெறுபவர் தனது பெயருக்கு முன்னால் திரு. என்பதற்கு பதிலாக சர் என போட்டு கொள்ளலாம்.
கடந்த இரு வருடங்களுக்கு முன் பிரிஸ்டல் நகரில் நடந்த மோதல் சம்பவத்தில் ஸ்டோக்ஸ் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இதில் ஒருவர் காயமுற்றார்.  இதனால் கடந்த 2017-18ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் அவர் பங்கேற்க முடியவில்லை.  ஆனால் இந்த சம்பவத்தில் ஸ்டோக்சுக்கு தொடர்பில்லை என பின்னர் தெரிய வந்தது.  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான அடுத்த ஆஷஸ் தொடர் வருகிற ஆகஸ்டு 1ந்தேதி நடைபெற உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *