உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலையில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதன்முறையாக பட்டம் வென்று அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதன் இறுதி போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (வயது 28) ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறவும், கோப்பையை வெல்லவும் உதவினார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடரிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் 3வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை குவித்தது அந்த அணி வெற்றி பெற உதவியது.

மாற்றி மாற்றி அடித்துகொண்ட ஸ்டோக்ஸ் மற்றும் அவரது மனைவி: உண்மையை உடைத்த மனைவி 1
England’s Joe Root (L) and England’s Ben Stokes add runs during the 2019 Cricket World Cup group stage match between England and Sri Lanka at Headingley in Leeds, northern England, on June 21, 2019. (Photo by Oli SCARFF / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read OLI SCARFF/AFP/Getty Images)

இதனால் இந்த ஆண்டிற்கான வீரர்களுக்கான வீரர் விருதுக்கு பென் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக கடந்த வாரத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பென் தனது மனைவி கிளார் ஸ்டோக்சுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அவர் தனது மனைவி கிளாரின் கழுத்தின் மேல் கை வைத்திருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகின. இதனால் ஸ்டோக்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விட்டது என தகவல்கள் பரவின.மாற்றி மாற்றி அடித்துகொண்ட ஸ்டோக்ஸ் மற்றும் அவரது மனைவி: உண்மையை உடைத்த மனைவி 2

ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த கிளார், டுவிட்டரில் இதற்கான விளக்கத்தினை தெரிவித்து உள்ளார். இதுபற்றி நேற்று அவர் வெளியிட்ட செய்தியில், என்ன ஒரு முட்டாள்தன தகவலை மக்கள் பரப்புகின்றனர். என்னால் நம்பவே முடியவில்லை. நானும், பென்னும் ஒருவருக்கொருவர் எங்களது முகத்தினை பிடித்து அழுத்தினோம். ஏனெனில் எங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு வெளிப்படவே நாங்கள் இப்படி நடந்து கொண்டோம்.

இது சண்டையில்லை. ஆனால் சிலர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி விட்டுள்ளனர் என ஆவேசமுடன் தெரிவித்து உள்ளதுடன் தனது கணவர் பென்னின் முகத்தில் செல்லமுடன் அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.



  • SHARE
  • விவரம் காண

    மெளனராகம் இசையும்!! தோனியின் புதிய டிராக்டரும்! CSK வெளியிட்ட அற்புத வீடியோ

    தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை....

    அந்த மனுசன் ருத்ரதாண்டவத்த இனிதான் பாக்க போறீங்க..! கொக்கரிக்கும் ரெய்னா!

    தோனி சோர்வடையவில்லை அவர் உடற்தகுதியுடன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா...

    வீடியோ: மின்னல் அடிக்கும் போது தன் மகளை பைக்கில் வைத்து சுற்றும் தல தோனி

    தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது...

    வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

    தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

    “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

    "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...