தந்தையர் தின வாழ்த்துக்கள் - தமிழில் டுவிட் போட்டு அசத்திய ஹர்பஜன் 1

தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தந்தையர் தின வாழ்த்துக்களை தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். தந்தையர் தின வாழ்த்துக்கள் – தமிழில் டுவிட் போட்டு அசத்திய ஹர்பஜன்
மும்பை:

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வானவர் ஹர்பஜன் சிங். இதையடுத்து, ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார். தமிழில் அசத்தலாக பல டுவீட்களை பதிவு செய்து கலக்கி வருகிறார்.தந்தையர் தின வாழ்த்துக்கள் - தமிழில் டுவிட் போட்டு அசத்திய ஹர்பஜன் 2

இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்கள் அப்பாக்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை உருக்கத்துடன் தமிழில் டுவிட் போட்டு அசத்தியுள்ளார். அத்துடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.தந்தையர் தின வாழ்த்துக்கள் - தமிழில் டுவிட் போட்டு அசத்திய ஹர்பஜன் 3

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட அப்பா… என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஹர்பஜனுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *