'என் தமிழ் உறவுகளே' மீண்டும் ஆரம்பித்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்! 1

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கேவில் இணைந்த பிறகு ஹர்பஜனுக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தமிழில் ட்விட் செய்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஹர்பஜன், புலவர் என்று தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

தமிழ் ட்வீட்டோடு நின்றுவிடாமல், வேட்டி கட்டி டான்ஸ் போடுவது, இரண்டு கைகளாலும் சிலம்பம் சுத்துவது என ஒரு தமிழனாகவே மாறிபோனார். கிரிக்கெட் நேரம் மட்டுமல்லாமல் தமிழ் பண்டிகைகள் போன்ற முக்கிய நாட்களில் தமிழ் ரசிகர்களுக்கு தமிழிலேயே வாழ்த்துகள் தெரிவிப்பார்.'என் தமிழ் உறவுகளே' மீண்டும் ஆரம்பித்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்! 2

கடந்த 3ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார் ஹர்பஜன். புலவர் ஹர்பஜனை வாழ்த்து மழையில் நனைத்தனர் தமிழ் ரசிகர்கள். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், ”என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்னு எனக்கு தோணுது. இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரணும்.தமிழ் மற்றும் சிஸ்கே ரசிகர்களால் நான் #ThankYouTamilnadu” என தெரிவித்துள்ளார்.

'என் தமிழ் உறவுகளே' மீண்டும் ஆரம்பித்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்! 3

 

 

இந்நிலையில்,

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அன்றைய போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மூதாட்டி சாருலதா.

 

87 வயதான மூதாட்டி சாருலதா இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது, “நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன்’’எனத் தெரிவித்தார். இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மூதாட்டி சாருலதாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.'என் தமிழ் உறவுகளே' மீண்டும் ஆரம்பித்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்! 4

 

அப்போது, விராட், ரோகித்துக்கு மூதாட்டி ஆசையாக முத்தங்களை கொடுத்தார். மூதாட்டி சாருலதாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய படங்களை விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் இந்திய அணி விளையாடவுள்ள மற்ற போட்டிகளுக்கும் தானே டிக்கெட் எடுத்து தருவதாகவும் கோலி உறுதியளித்தார்.

இந்நிலையில் இந்தியா விளையாடவுள்ள மற்ற போட்டிகளுக்கு தங்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டதாக  சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி தெரிவித்துள்ளார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கும் டிக்கெட் கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கூடுதலாக இன்னும் சில டிக்கெட்டுகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தாகவும் ஆனால் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *