சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்கள் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்காக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல் பட, இந்தியாவில் எதிரணியின் வீரர்கள் தானாகவே சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்குகிறார்கள்.
“எங்கள் அணியின் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா போன்ற பவுலர்களை வைத்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது,” என அருண் தெரிவித்தார்.
“கடைசி நேரங்களில் அவர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கடைசி நேரங்களில் எப்படி பந்தை வீசினால் ஒர்க் ஆகும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது,” என விஜயவாடாவில் பிறந்த அருண் கூறினார்.
2019 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணை நியமித்துள்ளார். ஏற்கனவே 2014-16இல் ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக இருந்த போது அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார்.
இந்திய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாரத் அருண், ஐந்து சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
“தங்களுடைய சிறந்த பார்மை தொடர்ந்து தக்கவைத்து கொள்வது தான் சிறந்த சவால்,” என அருண் தெரிவித்துள்ளார்.
“அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய அணிக்காக சிறப்பாக செயல் பட்டார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு பந்திலும் சிறப்பாக பந்துவீசினார்கள்,” என அருண் தெரிவித்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்டிக் பாண்டியாவை பற்றி பேசிய போது, எதிர்காலத்தில் இந்திய அணிக்காக ஜொலிக்க அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன.
“சவால்களை சந்திப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒருநாள் போட்டிகளில் அவருடைய கோட்டா 10 ஓவர்களையும் அவர் முழுமையாக போடுவது தான் பெரிய சவால்,” என அருண் கூறினார்.
அடுத்த படியாக இந்திய அணி நியூஸிலாந்துடன் மோதவுள்ளது. நியூஸிலாந்துடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.