SYDNEY, AUSTRALIA - SEPTEMBER 29: A general view is seen os a bat and gloves during game one of the International Twenty20 series between Australia and New Zealand at North Sydney Oval on September 29, 2018 in Sydney, Australia. (Photo by Mark Kolbe/Getty Images)

பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் காய்ன் சுண்டுவதற்குப் பதிலாக இனிமேல் சுண்டப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெறும். 2018-19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் மரக்கட்டையால் செய்யப்பட்டது. இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகம் படுத்தப்பட்டது. பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.பேட் சுண்டி டாஸ்... காய்னுக்கு பதில் பிக் பாஸ் லீக்கில் புதிய முறை! 1

தற்போது போட்டி தொடங்கும்போது டாஸ் சுண்டப்படும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும். இந்நிலையில் பிக் பாஷ், டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது. வருகிற 19-ந்தேதி முதல் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்த இருக்கிறது.

டாஸ் சுண்டப்படும்போது டெய்ல் விழுந்ததா? ஹெட் விழுந்ததா? என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. இதனால் பேட்டை சுண்ட முடிவு செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் கிறிஸ் லின் ” பிரிஸ்பேன் ஹீட்ஸ் ” அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . பிக் பாஷ் வரலாற்றில் முதல் முறையாக டிசம்பர் 19ல் பேட் மூலம் இவரே டாஸ் செய்து ஆரம்பித்து வைக்க உள்ளார்.

ஏபிசி. நெட் வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் பிக் பாஷ் தொடரின் தலைவரான ” கைம் மெக்கோனி ” கூறியதாவது : இது கிரிக்கெட் விளையாட்டில் ஒரு புது மாற்றமாக அமையும். ஆஸ்திரேலியா பேட்டிங் வடிவமைப்பு நிறுவனமான ” கொக்கும்ரா ” – விடம் ஆலோசனை செய்து டாஸ் செய்ய தகுந்தவாறு பேட் வடிவமைக்கப்பட்டு சோதனையும் செய்யப்பட்டு உள்ளது.

Cricket, India, Dhoni, Twitter, Sri Lanka

கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து டாஸ் போடும் வழக்கம் காய்ன் மூலமே போடப்பட்டு வருகிறது . இந்த காய்ன் டாஸ் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப மாறி உள்நாட்டு வீரர்களுக்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. 2019 பிக் பாஷ் சீசனின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியமும் டாஸ் போடும் போது காய்னிற்கு பதிலாக பேட் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

சில பேருக்கு தற்போது இந்த பேட் டாஸ் முறை பிடிக்காமல் கூட போகலாம். இந்த பிக்பாஷ் தொடருக்குப் பிறகு அவர்களுக்கும் இந்த பேட் டாஸ் முறை பிடிக்கும். காய்ன் டாஸ் மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங் தேர்ந்தெடுக்க நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல என்று கைம் மெக்கோனி கூறியுள்ளார் .

ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கான பிக் பாஷ் ‘டுவென்டி–20’ தொடர் வரும் டிச., 19ல் துவங்கவுள்ளது. இதில் புதிய முறையில் ‘டாஸ்’ போட முடிவு செய்துள்ளனர். அதாவது பாரம்பரியமான காயினுக்குப் பதில் போட்டி நடக்கும் இடத்தை சேர்ந்த அணியின் கேப்டன் பேட்டினை மேலே துாக்கிப் போடுவார்.

பேட் சுண்டி டாஸ்... காய்னுக்கு பதில் பிக் பாஸ் லீக்கில் புதிய முறை! 2

இதில் பேட்டின் மேற் பகுதி (மேடான), அல்லது கீழ் பகுதி (சமமான) வேண்டும் என மற்றொரு கேப்டன் கேட்பார். இதில் வெல்வதற்கு ஏற்ப பேட்டிங் அல்லது பவுலிங் செய்வது முடிவாகும்.

புதிய முறை

‘ஸ்டம்ஸ்’ மீது ஒளிரும் ‘பைல்ஸ்களை’ வைத்து ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் தான் அறிமுகம் செய்தனர். இதற்க உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்க தற்போது அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது போல ‘பேட் டாஸ்’ அறிமுகம் ஆக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *