Vijay Shankar of Chepauk Super Gillies bowls during Final (Match 32) of the fourth edition of TamilNadu Premier league 2019 played between Chepauk Super Gillies vs Dindigul Dragons, held at MA Chidambaram Stadium, Chennai on 15th August 2019.nnPhoto by: FAHEEM HUSSAIN/Focus Sports/ TNPL

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

முதலில் ஆடிய சேப்பாக் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கங்காஸ்ரீதர் ராஜு, கோபிநாத் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தரும் வகையில் கங்கா ஸ்ரீதர் 4, கோபிநாத் டக் அவுட்டாயினர். பின்னர் கேப்டன் கெளஷிக் காந்தி மட்டுமே அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அவரும் 22 ரன்களுடன் மோகன் அபிநவ் பந்தில் வெளியேறினார்.
விஜய் சங்கர் ஏமாற்றம்: ரன்களை குவிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் 1 ரன்னுடன் அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தார்.
உமாசங்கர் சுஷில் 21 ரன்களுடன் அபிநவ் பந்தில் ஜெகதீசனிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது சேப்பாக்.

அஸ்வினின் அணியை சிதைத்து கோப்பையை தட்டி தூக்கிய விஜய் ஷங்கர் அணி! 1

உத்திரசாமி-முருகன் அபாரம்:

பின்னர் களமிறங்கிய உத்திரசாமி-முருகன் அஸ்வின் இணை அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 44 ரன்களை விளாசிய உத்திரசாமி சசிதேவை ரன் அவுட்டாக்கினார் ஜெகதீசன். அவருக்கு பின் ஆட வந்த ஹரிஷ் குமாரும் 1 ரன்னுக்கும், சித்தார்த் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது சேப்பாக். முருகன் அஸ்வின் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்

.
திண்டுக்கல் தரப்பில் ஜெகந்நாதன் கெளஷிக் 2-22, மோகன் அபிநவ் 2-16, ரோஹித் 1-30 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

அஸ்வினின் அணியை சிதைத்து கோப்பையை தட்டி தூக்கிய விஜய் ஷங்கர் அணி! 2

முதலில் ஆடிய சேப்பாக் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
127 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. ஹரி நிஷாந்த் 4, ஜெகதீசன் 0, சதுர்வேத் 0, முகமது 15, ராமலிங்கம் ரோஹித் 2, ஜெகந்நாதன் கெளஷிக் 0 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். சுமந்த் ஜெயின் 46, மோகன் அபிநவ் 21, விவேக் 23, ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை சேகரித்தனர்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது திண்டுக்கல்.

பெரியசாமி அபாரம் 5 விக்கெட்:

அஸ்வினின் அணியை சிதைத்து கோப்பையை தட்டி தூக்கிய விஜய் ஷங்கர் அணி! 2

சேப்பாக் தரப்பில் பெரியசாமி அற்புதமாக பந்துவீசி 5-15 விக்கெட்டுகளை சாய்த்தார். அலெக்சாண்டர் 2-24, ஹரிஷ்குமார், விஜய் சங்கர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் அவர் பெற்றார்.
2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சேப்பாக் அணிக்கு ரூ.1 கோடியும், திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சமும் ரொக்கப் பரிசாக தரப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *