சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருக்கு அறுவை சிகிச்சை!! கேப்டன் பதிவியில் இருந்து நீக்கம்! ரசிகர்கள் கவலை! 1

தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செல்லும் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரவோ பதிவிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் டி20 தொடரான கரிபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ விளையாடுகிறார். இதற்காக பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் பிராவோவின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தால் பிராவோ கரிபியன் பிரிமியர் லீக் தொடரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளார். அத்துடன் இந்தக் காயத்திற்கு பிராவோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

அதில், “16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் எனது நான்காவது அறுவை சிகிச்சைக்கு செல்லவிருக்கிறேன். இந்த சிகிச்சை நல்ல முறையில் முடிய நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன். இதற்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடரை போன்று வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருக்கு அறுவை சிகிச்சை!! கேப்டன் பதிவியில் இருந்து நீக்கம்! ரசிகர்கள் கவலை! 2

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ இருந்து வந்தார். பயிற்சி சீசன் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2019 கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆல்-ரவுண்டரான பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்டு இதற்கு முன் பார்படோஸ் டிரிடென்ட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகளுக்காக விளையாடிள்ளார். தற்போது முதன்முறையாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *