ஐபிஎல் 2020 அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில் மோதும் மெகா அணிகள்! 1

மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் முதல் போட்டியில் மோதுகின்றது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல் 2020 அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில் மோதும் மெகா அணிகள்! 2

ஐபிஎல் 2020 அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில் மோதும் மெகா அணிகள்! 3 ஐபிஎல் 2020 அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில் மோதும் மெகா அணிகள்! 4

ஐபிஎல் லீக் தொடர்களில் பங்கேற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளது அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் RCB ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த அணியின் ஃபேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் Royal Challengers Bangalore என்றில்லாமல் வெறும் Royal Challengers என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் நீக்கப்பட்டு ள்ளது

இது குறித்து நியூசிலாந்து சுற்று பயணத்தில் உள்ள கோலி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். RCB அணியின் அதிகாரபூர்வ வலைதளங்களில் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த அணியின் கேப்டனான எனக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.ஐபிஎல் 2020 அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில் மோதும் மெகா அணிகள்! 5

மேலும் ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களும் @rcbtweets நம்முடைய சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்ன ஆயிற்று, உங்களுடைய படங்கள் மற்றும் பதிவுகள் எங்கு சென்றன என கேட்டுள்ளனர்.

பெங்களூரூவை தளமாக கொண்ட RCB, சமீபத்தில் புதிய ஸ்பான்ஸர்ஸுடன் கையெழுத்திட்ட நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் புதிய அணி, புதிய தசாப்தம்.. ஆனால் எங்களின் போர் குணம் ஒரு போதும் மங்காது.. ஒன்றாக இருந்தால் நாம் நிற்போம், பிளவுபட்டால் விழுவோம் உள்ளிட்ட வாசகங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *