டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த பிரம்மாண்ட ஐடியாவுடன் களமிறங்கும் ஐசிசி! 1

கிரிக்கெட் வீரர்களை தனி விமானத்தில் அழைத்து வந்து, சோதனை செய்து பிறகு உலக கோப்பை தொடரை நடத்தலாம்,’’ என பிராட் ஹாக் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்., 18 முதல் நவ. 15 வரை ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் செப். 30 வரை அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் உலக கோப்பை தொடர் ரத்தாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 49, கூறியது:

உலக கோப்பை தொடர் ரத்து அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படும் என பல்வேறு பேச்சுக்கள் உலா வருகின்றன. இதை நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு சில பிரச்னைகளை சரி செய்தால் உலக கோப்பை தொடரை எப்போதும் போல திட்டமிட்டபடி நடத்தலாம்.டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த பிரம்மாண்ட ஐடியாவுடன் களமிறங்கும் ஐசிசி! 2

உலகம் முழுவதும் தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல வீரர்கள், உலக கோப்பை தொடருக்கு தேவையான பயிற்சியில் ஈடுபடுவதற்கு கூட, வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். இங்கு சாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் வெளிநாட்டு வீரர்களை, தொடர் துவங்கும் ஒரு மாதத்துக்கு முன் ஆஸ்திரேலியா அழைத்து வர வேண்டும். தற்போது வர்த்தக விமானங்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீரர்களுக்காக ‘ஸ்பெஷல்’ விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும். விமானத்தில் ஏறும் முன் அனைத்து வீரர்களுக்கும் சோதனை செய்ய வேண்டும். இங்கு வந்ததும் இரு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும். இதன் பின் மீண்டும் சோதனை செய்து, எவ்வித சிக்கலும் இல்லை என்றால், பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கலாம்.டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த பிரம்மாண்ட ஐடியாவுடன் களமிறங்கும் ஐசிசி! 3

மற்றபடி சமூக இடைவெளி என்பது கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை அல்ல. களத்தில் பெரும்பாலும் வீரர்கள் ஒரு மீட்டருக்கும் மேலான இடைவெளியில் தான் பீல்டிங் நிற்பர். ‘சிலிப்’ பகுதியில் மட்டும் சற்று நெருக்கடி இருக்கும். இதற்கும் புதிய விதி கொண்டு வந்து விடலாம்.

ரசிகர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து போட்டியை கண்டு ரசிக்கலாம். இத்தனை வழிகள் இருக்க, ஏன் தொடரை ரத்து செய்ய வேண்டும். தவிர 2021ல் இந்தியாவில் அடுத்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இத்தொடரை ரத்து செய்தால், அடுத்த ஆண்டு குறுகிய இடைவெளியில் இரண்டு உலக கோப்பை தொடர் நடத்த நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *