அதிர்ச்சி செய்தி: இந்திய வீரர் பும்ராவிற்கு மற்றும் ஊக்க மருந்து சோதனை! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? 1

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென நேற்று ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணி, தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

அதிர்ச்சி செய்தி: இந்திய வீரர் பும்ராவிற்கு மற்றும் ஊக்க மருந்து சோதனை! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? 2

இந்நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது, பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

பயிற்சியில், பும்ரா நேற்று ஈடுபட்டிருந்தபோது, அவரை மட்டும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர். இதை மைதான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இரண்டு கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதலில், சிறுநீர் சோத னையும் 45 நிமிடத்துக்கு பின் ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சி செய்தி: இந்திய வீரர் பும்ராவிற்கு மற்றும் ஊக்க மருந்து சோதனை! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? 3

இந்த சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவ லும் இல்லை. வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்தில் நிலவும் தெளிவற்ற வானிலையால், பந்துவீச்சு வியூகத்தை வகுப்பதில் இந்திய அணி நிர்வாகம் திணறி வருகிறது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக புதன்கிழமை முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா. செளதாம்ப்டனில் உள்ள ஏஜியஸ் பெளல் மைதான பிட்ச் தட்டையாக இருக்கும் என்பதால், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை உண்டாக்க குல்தீப் யாதவ், சஹல் களமிறக்குவதா அல்லது விஜய் சங்கர் அல்லது கேதார் ஜாதவை பயன்படுத்துவதா என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.அதிர்ச்சி செய்தி: இந்திய வீரர் பும்ராவிற்கு மற்றும் ஊக்க மருந்து சோதனை! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்? 4
திங்கள்கிழமை மழை பெய்த நிலையில், புவனேஸ்வர் குமாரையும் களமிறக்கலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்து மைதானங்களில் நீரை வெளியேற்றும் முறை சிறப்பாக உள்ளதால், உடனே உலர்ந்து விடும் தன்மை கொண்டது. விஜய் சங்கர்-கேதார் ஜாதவ் ஆகியோர் ஜாதவுக்கே முதல் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
புதன்கிழமை செளதாம்ப்டனில் ஓரளவு மேகமூட்டம் மற்றும் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பும்ரா, ஷமி, குல்தீப், சஹல், ஹார்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தட்பவெப்ப நிலையை பொறுத்து ஆடக்கூடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *