கேப்டன்ஷிப்பில் தோனியை போன்றே 3 வேலைகளை செய்யும் குவிண்டன் டீ காக்! 1

கேப்டன் பதவி சுமையில்லை, பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்துவதற்கு கிப்பிங் உதவியாக இருக்கிறது என் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

 

கேப்டன் பதவி சுமையில்லை, பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்துவதற்கு கிப்பிங் உதவியாக இருக்கிறது என் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டான் டி காக். தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வரும் டி காக், பேட்டிங்கில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறார்.

கேப்டன்ஷிப்பில் தோனியை போன்றே 3 வேலைகளை செய்யும் குவிண்டன் டீ காக்! 2
LONDON, ENGLAND – MAY 30: Quinton De Kock (R) and Hashim Amla (R) of South Africa celebrate the wicket of Jonny Bairstow of England off the bowling of Imran Tahir of South Africa during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and South Africa at The Oval on May 30, 2019 in London, England. (Photo by Alex Davidson/Getty Images)

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்பது அவருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் விக்கெட் கீப்பர் பணி எனது கேப்டன் பதவிக்கும், பேட்டிங்கிக்கும் உதவுகிறது என்று குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குயிண்டான் டி காக் கூறுகையில் ‘‘விக்கெட் கீப்பராக பணியாற்றுவது என்னுடைய கேப்டன் பதவிக்கும், பேட்டிங்கிக்கும் உதவியாக இருக்கிறது. என்னால் எவ்வளவு முடியுமோ அதுவரை கீப்பராக பணியாற்றுவது எனக்கு முக்கியமானது.

எனக்கு ஏராளமான வேலைப்பளு என்று கூறுகிறார்கள். தற்போது வரை நான் சிறப்பாக இந்த வேலையை செய்து வருகிறேன். தற்போது கேப்டனாக பணியாற்றுவது சற்று கூடுதல் பொறுப்பாகும். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுடன் இந்த பணியை செய்ய இருக்கிறேன்’’ என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.கேப்டன்ஷிப்பில் தோனியை போன்றே 3 வேலைகளை செய்யும் குவிண்டன் டீ காக்! 3

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கேப்டவுனில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்தது. டென்லே 87 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ்வோக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர். ‌ஷம்சி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலுவாயோ, சுமுட்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 259 ரன் இலக்குடன் தென்ஆபிரிக்க அணி பின்னர் களம் இறங்கியது.

கேப்டன் குயின்டன் டி காக் சதத்தால் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து எளிதில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா 47.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

குயின்டன் டி காக் 113 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 107 ரன் எடுத்தார். அவரது 15-வது சதமாகும். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா சதத்தை தவற விட்டார். அவர் 103 பந்தில் 98 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி வருகிற 7-ந்தேதி டர்பனில் நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *