அஸ்வின் இல்லாத நேரத்தில் அஸ்வின் சாதனைக்கு ஆப்பு வைக்கப்போகும் யுஜவேந்திர சாஹல்! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினால் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றிப் பெற்றால் இந்திய அணி டி20 தொடரை வெல்லும் என்பதால், போட்டியை காண அதிக விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வின் இல்லாத நேரத்தில் அஸ்வின் சாதனைக்கு ஆப்பு வைக்கப்போகும் யுஜவேந்திர சாஹல்! 2
LONDON, ENGLAND – JUNE 09: Yuzvendra Chahal of India celebrates the wicket of Glenn Maxwell of Australia during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Australia at The Oval on June 09, 2019 in London, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஒரு சாதனையை படைக்க உள்ளார். அதாவது ஒரு விக்கெட் எடுத்தால் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் தன்வசப் படுத்துவார். இதற்கு முன்பு 46 போட்டிகளில் விளையாடிய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் 52 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல 35 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்து சாஹலும் முதலிடத்தை அஸ்வின் உடன் பகிர்ந்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் எடுக்கும்போது டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைப்பார்.

அஸ்வின் இல்லாத நேரத்தில் அஸ்வின் சாதனைக்கு ஆப்பு வைக்கப்போகும் யுஜவேந்திர சாஹல்! 3
India’s Kuldeep Yadav (R), Yuzvendra Chahal (front L) and wicketkeeper Mahendra Singh Dhoni (C) celebrate after New Zealand’s Lockie Ferguson was stumped during the first one-day international (ODI) cricket match between New Zealand and India at McLean Park in Napier on January 23, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

மேலும் இந்தப் பட்டியலில் 42 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் எடுத்து வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மூன்றாம் இடத்தில் உள்ளார். பும்ரா தற்போது காயத்திலிருந்து மீண்டு வருவதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிற்கு தற்போது சர்வதேச டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே சாஹல் இந்தச் சாதனையை சில காலம் தன்வசம் வைத்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *