சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் – மிக்கி ஆர்தர்

தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. ஜூன் 18ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளன.

இதனால், இதுவரை அதிக வாய்ப்பு கிடைக்காத இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களை டார்கெட் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறினார் அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

இந்திய அணியில் உள்ள ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தெறி பார்மில் உள்ளதால், நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2017-இல் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவான் (317), ரோகித் சர்மா (304) மற்றும் விராட் கோலி (253) ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே உள்ள யுவராஜ் சிங், தோனி, கேதார் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து வெறும் 200 ரன் அடிக்க, தவான், ரோகித், விராட் ஆகியோர் சேர்ந்து 874 ரன் அடித்துள்ளனர்.

முதல் மூன்று வீரர்கள் செம்ம பார்மில் இருக்கிறார்கள். இதனால், நடுவரிசை வீரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என மிக்கி ஆர்தர் கூறினார். தவான், விராட், ரோகித் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றுவது எளிதல்ல, ஆனால், அவர்களை தொடக்கத்திலேயே தூக்கினாள் தான் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

“இதுவரை அதிக வாய்ப்பு கிடைக்காத இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களை டார்கெட் செய்ய வேண்டும்,” என பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறினார் அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

இந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் முதல் போட்டியில் இந்திய அணியுடன் அடிபட்டாலும், இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்.

ஸ்விங் ஆகாத காரணத்தினால், தொடக்கத்திலேயே அந்த அணி விக்கெட் எடுப்பது கஷ்டம். ஆனால், இரண்டாவது பவர்-பிளேவில் சிறப்பாக வீசி விக்கெட் எடுக்கின்றனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.