தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதன் 4வது போட்டியில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கிறது.
இந்த போட்டியின் போது இந்தியாவின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த சம்பவம் முதல் இன்னிங்சின் 46வது ஓவரின் போது நடந்தது. காயத்தால் அவதி படும் பாகிஸ்தானின் வாஹப் ரியாஸ், பந்தை வீசி விட்டு, வலியால் கீழே விழுந்தார்.
இதனால், பிட்ச்சில் உட்கார்ந்து காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி விட்டு, வலியால் துடித்தார். இதனை கண்ட யுவராஜ் சிங், அவரிடம் சென்று பரிசோதனை செய்தார். வலியால் துடித்த அவர், அந்த ஓவரை முடிக்காமல் மைதானத்தை வெளியே சென்றார்.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த போட்டியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.