தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இருக்கும் முதல் 8 அணிகள் தான் விளையாடுகிறது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்து – வங்கதேச போட்டியுடன் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது என சொல்ல வேண்டும்.
ஜூன் 4ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி எட்பேஸ்டனில் நடக்கிறது. ஐசிசி தொடர்களில் மட்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு, ரசிகர்களின் ஆர்வம் அளவில்லாதது. இதனால், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்க தொடங்கிய சில மணி நேரங்களில், டிக்கெட்டுகள் மளமளவென விற்றது.
இந்த போட்டிக்கு எட்பேஸ்டன் மைதானத்தில் 24,156 பேர் இருந்தார்கள். இதான், அந்த மைதானத்திற்கு வந்த அதிக ரசிகர்கள் கூட்டமாம். இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.