சாம்பியன்ஸ் டிராபி 2017: விட்ட கேட்சுக்கு அப்பீல் செய்த தமீம் இக்பால்

Bangladesh player Tamil Iqbal celebrating his century against England in Champions Trophy 2017.

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், தமீம் இக்பாலின் சதத்தால் 50 ஓவர் முடிவில் 300 ரன்களை கடந்தது. 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, தொடக்கத்தில் ராயின் விக்கெட்டை பறிகொடுத்தாலும், ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடியது.

ஒரு கட்டத்தில் வங்கதேசத்துக்கு விக்கெட் தேவை பட்ட நிலையில், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அடித்த பந்து காத்தில் பறந்தது, அதை பறந்து வந்து பிடித்தார் தமீம் இக்பால். ஆனால், பந்து அவர் கையில் உட்காருவதற்கு முன், அந்த பந்து தரையில் பட்டது.

அதை கவனிக்காத இக்பால், அவுட் என அப்பீல் செய்து சந்தோசத்தில் ஓடி வந்தார். ஆனால், சந்தேகத்தில் இருந்த நடுவர்கள் எந்த முடிவுக்கும் செல்லாமல், 3வது நடுவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

டிவியில் மீண்டும் மெதுவாக காட்டினபோது தான் தெரிந்தது, பந்து தரையில் பட்டது என்று. இதனால், ‘நாட் அவுட்’ என நடுவர்கள் தீர்ப்பை கூறினர். அந்த கேட்ச் பிடித்தது இக்பால் அப்பீல் செய்ததை பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.