சென்னை என் இரண்டாவது வீடு : ரெய்னா

சென்னை என் இரண்டாவது வீடு : ரெய்னா

இந்த வருட துலீப் ட்ராபி தொடரில் சுரேஷ் ரெய்னா இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை வந்திருக்கிறார் ரெய்னா.

http://tamil.sportzwiki.com/suresh-raina-parthiv-patel-abhinav-mukund-lead-duleep-trophy/

இந்திய துலீப் ட்ராபி தொடரின் அனைத்து போட்டிகளும் பிங்க் நிற பந்தில் நடைபெறும். லீக் போட்டிகள் 4 நாள் போட்டிகளாகவும், இறுதி போட்டி மட்டும் 5 நாள் போட்டியாகவும் நடைபெறும். இந்த துலிப் ட்ராபி தொடரில் அசத்தும் பட்ச்சத்தில் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் அதிகம்.

 புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் ஸ்டாராக களமிறங்கவிருக்கும் சுரேஷ் ரெய்னா சென்னையில் கூறியதாவது:

சென்னை எனது 2-வது தாயகம். பணத்தால் நீங்கள் பொருட்களை வாங்கலாம், நினைவுகளை வாங்க முடியாது. நான் இங்கு இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய போது நிறைய விஷயங்களை நினைவில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

இந்திய அணியில் மீண்டும் எனக்கான இடத்தை கடினமான உழைப்பின் மூலமே பெற விரும்புகிறேன், நான் படிக்கட்டுகளில் ஏறிச்செல்லவே விரும்புகிறேன், நகரும் மின்படிக்கட்டுகளில் அல்ல.

நான் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக உண்மையிலேயே பலவீனமாக இருப்பேனென்றால் ஒருநாள் போட்டிகளிலும் எனது அந்தப் பலவீனத்தை அணிகள் பயன்படுத்தியிருக்குமே.

பிறகு நான் எப்படி உலகின் பல மூலைகளிலும் 200க்கும் மேற்பட்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க முடியும். என் ஆட்டத்தை மேம்படுத்த பலதரப்பட்டவர்களிடமும் பேசி ஆலோசனை பெற்று வருகிறேன்.

தோனி தற்போது பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். விக்கெட் கீப்பிங்கிலும் குறைகாண முடியாது. அணிக்காக உண்மையான பங்களிப்புகளைச் செய்து வருகிறார்.

தோனியும் கோலியும் ஒரே குணாம்சம் கொண்டவர்களே, கடினமானவர்கள், எளிதில் இவர்களை வீழ்த்தி விட முடியாது.

2019 உலகக்கோப்பையில் வாய்ப்பு என்றெல்லாம் நான் நினைக்கவில்லை, கடந்த கால வெற்றிகளிலும் திளைக்க விரும்பவில்லை, இப்போது என்ன என்பது பற்றிய நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு கூறினார் ரெய்னா. 223 ஒருநாள் போட்டிகளில் ரெய்னா 5,568 ரன்களை 35.46 என்ற சராசரியின் கீழ் 93.76 என்ற வலுவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

65 டி20 சர்வதேச போட்டிகளில் 1307 ரன்களை எடுத்துள்ளார் ரெய்னா. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்கிறார்.

Editor:

This website uses cookies.