சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ஆந்தம் வெளியீடு! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் மோதுகிறது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பழையனவை தோனியும் மறக்கவில்லை, சென்னை சூப்பர் கிங்ஸும் மறக்கவில்லை என்பதற்கு, இந்த ஆந்தமே ஒரு சான்று!.

 

 

 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது.

இந்நிலையில், இரண்டு ஆண்டு தடையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை அணி ரீ – என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் CSK Anthem என்ற ஒரு வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரேம்ஜி பாடியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *