Kaushik Gandhi .M of Chepauk Super Gillies and Jagadeesan .N of Dindigul Dragons pose with the TNPL 2019 trophy before the press conference on the eve of the fourth edition of TamilNadu Premier league 2019 played between Dindigul Dragons vs Chepauk Super Gillies, held at MA Chidambaram Stadium, Chennai on 14th August 2019. Photo by: FAHEEM HUSSAIN/Focus Sports/ TNPL

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை சாய்த்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை விரட்டியடித்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

டிஎன்பிஎல் வெற்றிக்கனி யாருக்கு? சேப்பாக்கம் - திண்டுக்கல் பலபரிட்சை! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? 1

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்

2017-ம் ஆண்டு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கோபிநாத் (293 ரன்கள்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (225 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் பெரியசாமி (16 விக்கெட்), ஹரிஷ்குமார் (15 விக்கெட்), அலெக்சாண்டர் (11 விக்கெட்), முருகன் அஸ்வின் (8 விக்கெட்) உள்ளிட்டோர் கலக்குகிறார்கள். குறிப்பாக மலிங்கா பாணியில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி இந்த சீசனில் 20-க்கும் மேற்பட்ட யார்க்கர் வீசி எதிரணியினரை கலங்கடித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத நட்சத்திர வீரர்களான கேப்டன் கவுசிக் காந்தி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் முழுமையான பங்களிப்பை அளித்தால் சேப்பாக் சூப்பர் கில்லீசின் வீறுநடையை தடுப்பது கடினம்.

டிஎன்பிஎல் வெற்றிக்கனி யாருக்கு? சேப்பாக்கம் - திண்டுக்கல் பலபரிட்சை! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? 2

கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று விட்டதால் இந்த போட்டியில் ஆடவில்லை. இருப்பினும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன் (448 ரன்கள்), ஹரி நிஷாந்த் (318 ரன்கள்) ஆகியோர் இந்த சீசனில் 3 முறை 100 ரன்களுக்கு மேல் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு சேர்த்து இருக்கின்றனர். ஒரு சதம் மற்றும் 4 அரைசதம் அடித்துள்ள ஜெகதீசன் மேலும் 25 ரன்கள் சேர்த்தால் டி.என்.பி.எல். போட்டி தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த வகையில் மதுரை பாந்தர்ஸ் வீரர் அருண்கார்த்திக் கடந்த ஆண்டில் 472 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. பந்து வீச்சில் சிலம்பரசன் (14 விக்கெட்), ரோகித் (10 விக்கெட்), கவுசிக் (8 விக்கெட்), அபினவ் (7 விக்கெட்) ஆகியோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

டிஎன்பிஎல் வெற்றிக்கனி யாருக்கு? சேப்பாக்கம் - திண்டுக்கல் பலபரிட்சை! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? 3

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கில்லீஸ் அணி 3 முறையும், திண்டுக்கல் அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத், கவுசிக் காந்தி (கேப்டன்), விஜய் சங்கர், சசிதேவ், ஹரிஷ்குமார், முருகன் அஸ்வின், சுஷில், சித்தார்த், பெரியசாமி, அலெக்சாண்டர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த், ஜெகதீசன் (கேப்டன்), விவேக், சதுர்வேத், முகமது, சுமந்த் ஜெயின், ஆதித்யா அருண், யாழ் அருண்மொழி அல்லது ஜெ.கவுசிக், ரோகித், சிலம்பரசன், அபினவ்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் போர்ட்ஸ் தமிழ், விஜய் சூப்பர் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *