சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்!! கெய்ல் சாதனை 1

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் கிஸ் கெய்ல் ஆவார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்!! கெய்ல் சாதனை 2

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்திற்க்கு அணிகளுக்கு இடயேயான டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள செஸ்ற்ற் லீ மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இருபது ஓவர்கள் முடிவில் 176 ரன் குவித்தது.

துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 21 பந்துகளில் 40 ரன் அடித்தார்.பின்னர், தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனார் கெய்ல். இந்த இன்னிங்சில் 3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிறிஸ் கெய்ல் 40 ரன்னும், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் 51 ரன்னும் குவித்தனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்!! கெய்ல் சாதனை 3

இறுதியாக, இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 176 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

பின்னர் சற்று இலகுவான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 155 ரன்னுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்!! கெய்ல் சாதனை 4

இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர் அலெஸ் கேல்ஸ் 17 பந்தில் அதிரடியாக ஆடி 43 ர்ன குவித்தார். பின்வரிசை வீரர்கள் பெரிதும் சோபிக்காததால் இங்கிலாந்து தோல்வியைத் தலுவியது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் ஆட்ட  நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்!! கெய்ல் சாதனை 5

4 ஓவர்களில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியள் பட்டியல்

 

1. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 52 போட்டி 103 சிக்சர்

2.மெக்கல்லம் ( நியூசிலாந்து) – 71 போட்டி 91 சிக்சர்

3. சேன் வாட்சன் ( ஆஸ்திரேலியா) – 58 போட்டி 83 சிக்சர்

4.மார்டின் கப்டில் ( நியூசிலாந்து) – 61 போட்டி 76 சிக்சர்

5.யுவராஜ் சிங் (இந்தியா) – 58 போட்டி 74 சிக்சர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *