ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை காலி செய்த யுனிவர்சல் பாஸ்!! 1

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வரலாற்றில் ‘யூனிவர்ஸல் பாஸ்’ கிறிஸ் கெயில் புதிய சகாப்தம் படைத்தார். இந்தியாவுடனான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது ஜாம்பான் வீரர் பிரையன் லாராவை முந்தி 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் எனும் அரிய சாதனையைப் படைத்தார்.

இவற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 297 ஆட்டங்களிலும், உலக லெவன் அணிக்காக 3 ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பிரையன் லாரா 19 சதங்களும், 62 அரைசதங்களும் குவித்துள்ளார். கிறிஸ் கெயில் 25 சதங்களும், 52 அரைசதங்களும் விளாசியுள்ளார்.ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை காலி செய்த யுனிவர்சல் பாஸ்!! 2

இதன்மூலம் மேலும் சில சாதனைகளையும் தன்வசப்படுத்தினார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 297 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள கிறிஸ் கெயில் 10,353* ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக மொத்த ரன்கள் குவித்தள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

25* சதங்கள் – இதுவே மே.இ.தீவுகள் வீரர் ஒருநாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச மொத்த சதங்களாகும்.

அதிகபட்சம் 215 – இதுவே மே.இ.தீவுகள் பேட்ஸ்மேனால் ஒரு இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். மேலும் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் கெயில் வசம் உள்ளது.

ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை காலி செய்த யுனிவர்சல் பாஸ்!! 3
Cricket, West Indies, England, Chris Gayle

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (325*) விளாசிய வீரராக திகழ்கிறார்.

மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் (123*) பிடித்த மே.இ.தீவுகள் வீரராகவும் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மே.இ.தீவுகள் வீரர்:

10,349* கிறிஸ் கெயில்
10,348 பிரையன் லாரா
8,778 ஷிவ்நரேன் சந்திரபால்
8,648 டெஸ்மண்ட் ஹெயின்ஸ்
6,721 விவியன் ரிச்சர்ட்ஸ்
6,248 ரிச்சி ரிச்சர்ட்ஸன்

ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை காலி செய்த யுனிவர்சல் பாஸ்!! 4
Cricket, West Indies, England, Chris Gayle

அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் 5 மே.இ.தீவுகள் வீரர்:

கிறிஸ் கெயில் – 297*
பிரையன் லாரா – 295
ஷிவ்நரேன் சந்திரபால் – 268
டெஸ்மண்ட் ஹெயின்ஸ் – 238
கார்ல் ஹூப்பர் – 227

அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் 5 வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் – 463
மஹேலா ஜெயவர்தனே – 448
சனத் ஜெயசூர்யா – 445
குமார் சங்ககாரா – 404
ஷாஹித் அஃப்ரிடி – 398

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *