TAUNTON, ENGLAND - JUNE 17: Oshane Thomas of West Indies looks back as he dislodges a bail on his follow through which is given not out during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between West Indies and Bangladesh at The County Ground on June 17, 2019 in Taunton, England. (Photo by Alex Davidson/Getty Images)

இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்த க்ளைவ் லாய்டுக்கு, வெஸ்ட் இண்டீஸின் ‘போட்டி பிளான்’ ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் அனைவரது கவனைத்தையும் ஈர்த்தது வெஸ்ட் இண்டீஸ்.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 288 ரன்னை சேஸிங் செய்யும்போது 273 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. நடுவரின் மோசமான முடிவுகளால்தான் தோற்றோம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குற்றம்சாட்டினர். இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸும் இருக்கலாம் என கணிக்கப்பட்டது.Bangladesh's Mushfiqur Rahim celebrates his half-century with Bangladesh's Mahmudullah during the 2019 Cricket World Cup group stage match between Australia and Bangladesh at Trent Bridge in Nottingham, central England, on June 20, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிட்ட நிலையில், இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மோசமாக தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது எனக்கூறலாம்.

குறிப்பாக வங்காள தேசத்திற்கு எதிராக 321 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. வங்காள தேசம் 41.3 ஓவரிலேயே சேஸிங் செய்து அசத்தியது. காட்ரெல், ஹோல்டர், ரஸல், கேப்ரியல், தாமஸ் ஆகிய ஐந்த வேகப்பந்து வீச்சாளர்களும் ‘ஷார்ட் பிட்ச் பவுன்சர்’ யுக்தியை பயன்படுத்தினர். வங்காள தேச பேட்ஸ்மேன்கள் அதை சிறப்பாக எதிர்கொண்ட போதும், வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் திட்டத்தை மாற்றவில்லை.

வெஸ்ட் இண்டீசை கழுவி ஊற்றும் முன்னால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்! 1
TAUNTON, ENGLAND – JUNE 17: Andre Russell of West Indies bowls during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between West Indies and Bangladesh at The County Ground on June 17, 2019 in Taunton, England. (Photo by Harry Trump-IDI/IDI via Getty Images)

பவுன்சர் என்ற ஒரே திட்டத்துடன்தான் வெஸ்ட் இண்டீஸ் களம் விளையாடியது ஏமாற்றம் அளிக்கிறது என்று முன்னாள் ஜாம்பவான் க்ளைவ் லாய்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து க்ளைவ் லாய்டு கூறுகையில் ‘‘வங்காள தேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய விதம் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரே திட்டத்துடன் (Game Plan) சென்றது. அவர்களின் போட்டி திட்டத்தில் மாற்றுவகை இல்லை.

பவுன்சர் மூலம் வங்காள தேச வீரர்களை வீழ்த்த நினைத்த அவர்கள், இங்கிலாந்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

வெஸ்ட் இண்டீசை கழுவி ஊற்றும் முன்னால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்! 2
(Photo by Saeed KHAN / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

மழை பெய்த போதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் எப்போதுமே பவுன்சரால் மிரட்ட இயலாது. ஆடுகளம் க்ரீன் போன்று தெரியலாம். ஆனால், முழுவதும் க்ரீனாக இல்லை. அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள தயாராக வந்தனர். 321 ரன்னை சேஸிங் செய்தது மிகப்பெரிய விஷயம். அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *