கரோனா தடுப்பிற்கு கம்பிர் கொடுத்த வித்யாசமான நிவாரணத்தொகை! 1

கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 47,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கரோனா தடுப்பிற்கு கம்பிர் கொடுத்த வித்யாசமான நிவாரணத்தொகை! 2

இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நாடு நமக்கு என்ன செய்தது எனக் கேட்கிறார்கள். நிஜமான கேள்வி, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பதுதான். என்னுடைய இரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

 

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட 20 சதவீதம் தப்லிகி ஜமாத் கூட்டத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்புடன் தொடர்புடைய 19 பேர் வெவ்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். தெலுங்கானா 9 உயிரிழப்புகளையும்,டெல்லி, மராட்டியம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை தலா இரண்டு உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளன.கரோனா தடுப்பிற்கு கம்பிர் கொடுத்த வித்யாசமான நிவாரணத்தொகை! 3
கிட்டத்தட்ட 9,000 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 1306 பேர் வெளிநாட்டினர். இவர்களின் சோதனை முடிவுகள் மற்றும் நிஜாமுதீன் மசூதியில் கூட்டத்திற்கு பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் சோதனை முடிவுகள் இன்னும் காத்திருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சுமார் 9,000 தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *