முன்னாள் இந்திய கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி சமூக விலகல் என்பது ஒர் புதிய ஒற்றுமை என்பதோடு கரோனாவை இதுவரை உலகம் காணாதது, இனிமேலும் காண முடியாமல் கூட போகக்கூடியது என்று கூறியுள்ளார்.
டிடி நியூஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில் கங்குலி கூறியதாவது:
உள்ளுக்குள் இருங்கள், நோய்த்தடுப்புச் சக்தியை பராமரியுங்கள், சமூக விலக்கல் என்பது புதிய ஒற்றுமை, புதிய நல்லிணக்கம் என்பதையும் முக்கியமாக கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இது நமது தேசியக் கடமை என்பதையும் உணர்க.
உலகம் முழுதும் இது கடினமான காலக்கட்டம், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் நாம் நிமிர்ந்து நின்று இதை எதிர்கொள்வோம். பிரதமர், முதல்வர்கள், சுகாதாரத்துறை முயற்சி செய்கின்றனர், போலீஸ் நல்ல பணியாற்றி வருகிறது.

ஆனால் தனிமையை நாம்தான் பராமரிக்க வேண்டும். உத்தரவுகளை மதித்து பாதுகாப்பாக இருப்போம். நாம் ஒன்றிணைந்து பொறுப்பாக இருந்தால் இதில் வெல்லலாம். இது ஒரு அபாயகரமான வைரஸ், இதுவரை உலகம் இப்படியொன்றை கண்டதில்லை, உலகம் இனி இப்படி ஒன்றை காணாமலும் இருக்க வாய்ப்புள்ளது, இந்தக்கால ஒரு தனித்துவமான விதிவிலக்கான காலக்கட்டம், ஆகவே பொறுப்பாக இருப்போம், முக்கியமாக வீட்டினுள் இருப்போம் ஆரோக்கியமாக இருப்போம்.” என்றார்
