உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டதால், பிக் பாஷில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி கற்றுக் கொடுத்த பாடம்: பிக் பாஷில் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டதால், பிக் பாஷில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் போட்டி ‘டை’யில் முடிந்தது. அதன்பின் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்தது. இதனால் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் போட்டி ‘டை’யில் முடிந்தால், அதன்பின் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், ரோஹித் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய கேப்டன் கோலிக்கு, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார்.
கோலியால் வழக்கம் போல ரொட்டேட் செய்யவும் முடியவில்லை. அடித்து ஆடவும் முடியவில்லை. ஒருக்கட்டத்தில் டென்ஷனான கோலி, ஹென்ரிக்ஸ் ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடும்போது, ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஒரு இடி இடித்தார்.
ஆனால், இதை கேஷுவலாக எடுத்துக் கொண்ட ஹென்ரிக்ஸ் அதை நடுவரிடம் புகாரளிக்கவில்லை. இந்நிலையில், ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.