2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகவும் பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. இது கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்றால் அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்கமருத்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்!! எப்போதிலிருந்து தெரியுமா? 1

இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர், “நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தற்போது உடை இடம் பெறாததற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தான் காரணம். ஏனெனில் 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது ஒலிம்பிக் கமிட்டி.

உலக ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முயற்சிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் (அப்போது இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) பல நாடுகளின் தேசிய கிரிக்கெட் வாரியங்களும் முட்டுக்கட்டை போட்டது. ஒலிம்பிக்கில் விளையாட கிரிக்கெட் அழைப்பினை பல நாடுகள் ஏற்க மறுத்தது அதன் பின்னர் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளூர் அணிகள் மட்டுமே 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டனர்.ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்!! எப்போதிலிருந்து தெரியுமா? 2

இறுதியில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையே சில பிரச்சனை ஏற்பட்டு அந்த இரண்டு அணிகளும் வெளியேறினார். கடைசியில் ஒரே ஒரு இரண்டு நாள் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கிரேட் பிரிட்டன் அணி வென்றது.  இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கிரேட் பிரிட்டன் அணிக்கு தங்கப்பதக்கமும் எந்த இடத்திற்கு வந்த பிரான்ஸ் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் கலந்து கொண்ட இந்த நான்கு அணிகளுமே அந்த நாட்டிற்காக பிரத்தியேகமாக தயாரான அணிகள் கிடையாது.

உள்ளூரில் பயிற்சி பெற்று வந்த கிளப் அணிகள் ஆகும். இவ்வாறு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பது தொடர்பான பிரச்சனைகள் ஆரம்பமானது. தற்போது வரை இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகிறது. மேலும் ஒலிம்பிக் 15 முதல் 20 நாட்கள் நடக்கும் தொடர் ஆகும்.ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்!! எப்போதிலிருந்து தெரியுமா? 3

இதில் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய பல்வேறு விதமான போட்டியில் உள்ளது . குறைந்தது ஒரு 20 ஓவர் போட்டி நடக்க வேண்டும் என்றால் மூன்றரை மணி நேரம் தேவை. இந்த கால அளவும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பத்து ஓவர் அல்லது 100 பந்து போட்டிகள் நடைபெற்றால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது சற்று எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. • SHARE

  விவரம் காண

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபைக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...

  தோனி 2023 உலககோப்பையிலும் ஆடுவார்: முன்னாள் வீரர் திடுக் தகவல்

  கிரெக் சாப்பல் பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதில் ஒருவர்தான் இந்த ஆந்திரா வீரர் வேணுகோபால் ராவ். ஆந்திராவில் உள்ள...

  இந்திய இளம் வீரர்கள் நன்றாக ஆட இதுதான் காரணம்: அப்ரிடி ஓப்பன் டாக்

  சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை இளம் இந்திய வீரர்கள் சமாளித்து மீண்டு வர அவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் துணைபுரிகிறது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர்...

  பவுண்டரிக்கு அடிக்க வேண்டிய பந்தை கட்டை வைக்க கூடாது: புஜாராவிற்கு மறைமுக அட்வைஸ் கொடுத்த கோலி

  வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து விமர்சனங்களை கோலி எதிர்கொண்டு வருகிறார். நியூஸிலாந்து நெருக்கமான களவியூகம் அமைத்து நீண்ட நேரம் ஒரே...

  வீடியோ: பந்தை சேதப்படுத்திய பாக். வீரர்! மைதானத்திலேயே தட்டிக்கேட்டஜேசன் ராய்!

  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 என்றாலே எப்போதும் சர்ச்சைகள்தான் ஒன்று சூதாட்ட சர்ச்சை கிளம்பும் அல்லது வீரர்கள் பந்தைச் சேதம் செய்த சர்ச்சைக்...