தோனி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பள்ளிப்பருவத்தை நினைவுப்படுத்தும் நகைக்சுவையான காட்சிகளாக உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தோனியின் ஓய்வு குறித்து பலர் முன்னாள் வீர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி இதுவரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தோனி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இரவு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அதில் ஒருவர் முதல் பந்திலேயே அவுட்டாக நான் இன்னும் தயாராகவில்லை இது ட்ரையல் தான் என்று அழுவினி ஆட்டம் ஆடுகிறார்.
பின் மீண்டும் பேட்டிங் செய்யும் அவர் சிக்ஸர் அடிப்பது போல் பேட்டை உயர்த்த பந்து ஸ்டெம்பில் பட்டு அவுட்டாகி விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மில் பலர் முதல் பந்திலேயே அவுட்டானால் இது ட்ரையல் என்று ஏமாற்றும் காட்சிகள் கண்முன் வந்து போகும்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தோனி “இந்த வீடியோ மோசமான வெளிச்சத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால், இதில் உள்ள நகைச்சுவை ட்ரையல் பால், அம்பயர் தீர்ப்பு தான் இறுதி என்பது தான். நம் பள்ளிக் கூட நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது” என்று கூறி உள்ளார்.
https://www.instagram.com/mahi7781/?utm_source=ig_embed
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றும் பொருட்டு அணியிலிருந்து இரண்டு மாத கால தற்காலிக ஓய்வை கேட்டுப்பெற்றார்.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டித் தொடர்களில் தோனி பங்கேற்கவில்லை. இதனிடையே தனது இரண்டு மாத கால ஓய்வை மேலும் இரு மாதங்கள் அவர் நீட்டித்துள்ளதாகவும் அதனால் நவம்பர் மாதம் வரை அவர் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த ஓய்வு நீட்டிப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, ஐபிஎல்லின்போது முதுகு பகுதியிலும், உலக கோப்பை தொடரின்போது மணிக்கட்டிலும் தோனிக்கு ஏற்பட்ட காயமானது இன்னும் முழுமையாக குணமாகவில்லை எனவும்,அதனாலேயே போட்டிகளில் பங்கேற்க அவர் தயக்கம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.