கிரிக்கெட் மைதானத்தில் மயக்கம் அடைந்து உயிரை விட்ட கோவா வீரர்!! 1

கோவா ரஞ்சி கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நேற்று கிரிக்கெட் விளையாடிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கோவா ரஞ்சி அணியில் விளையாடியவர் ராஜேஷ் கோட்கே. சமீபகாலமாக அணிக்குத் தேர்வாகவில்லை என்பதால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், மர்கோவா நகரில் உள்ள மைதானத்தில் நேற்று ராஜேஷ் கோட்கே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 30 ரன்கள் சேர்த்து ஆடி வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆடுகளத்தில் சரிந்தார்.

கிரிக்கெட் மைதானத்தில் மயக்கம் அடைந்து உயிரை விட்ட கோவா வீரர்!! 2

 

இதையடுத்து, சகவீரர்கள் அனைவரும் ராஜேஷை தூக்கிக் கொண்டு, அருகில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மர்கோவா கிரிக்கெட் கிளப்பின் செயலாளர் அபூர்வ பெம்ரே கூறுகையில், “ ராஜேஷ் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோவா மாநிலத்துக்காக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளிலும், பல ஒருநாள் போட்டிகளிலும் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். ராஜேஷ் இறந்தது கோவா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் “ எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு,

ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.Team India went past their 31 victories they had in 2016.

நேற்றுமுன் தினம் நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் அபாட்டின் பந்து, பிலிப்பின் தலையில் பலமாக தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே விழுந்தார் ஹியூக்ஸ்.

தலையில் ரத்தம் சொட்டச், சொட்ட சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது.

இரண்டு நாட்களாக கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

25 வயதேயான பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப் ஹியூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், விளையாட்டு உலகையும் உலுக்கியுள்ளது. ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல நாட்டு வீரர்கள் ஹியூக்ஸுக்கு புகழாரம் சூட்டினர்.

இந்நிலையில் ஹியூக்ஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டின் மோசமான வடிவமைப்புதான் அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.வ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *