மாரடைப்பு வந்தது மூலமாக மைதானத்திலேயே கிரிக்கெட் வீரர் இறந்துள்ளார். கிரிக்கெட் மைதானத்திலும் ஆடுகளத்திலும் வீரர்கள் இறக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூஸ் பந்து தாக்கியதன் மூலம் மைதானத்திலேயே கோமா நிலைக்கு சென்று பின்னர் இறந்து போனார்.
அதன் பின்னர் கிரிக்கெட் மைதானத்தில் பல இழப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றது. தற்போது 24 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலியால் கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் மருத்துவர்கள் அவர் மூலமாக கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது..
நெஞ்சுவலியால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் அவர். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. அவருக்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மைதானத்தில் அவர் இருதய வலியால் அவதிப்பட்ட கீழே விழுந்துள்ளார். கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் . அதன் பின்னர் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
என்று கூறினார் அந்த மருத்துவர்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி, சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணியும், நியூ சவுத் வேல்ஸ் அணியும் மோதின.
தெற்கு ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வந்தது. போட்டியின் 49-வது ஓவரை நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசினார்.
தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய பிலிப் ஹியூஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த ஓவரில் சீன் அப்பாட் வீசிய 3-வது பந்தானது பவுன்சராக மேலே எழும்ப, அதை புல் ஷாட் அடிக்க ஹியூஸ் முயற்சித்தார். ஆனால், பந்தானது பேட்டில் படாமல் ஹியூஸ் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கியது. அப்படியே நிலைகுலைந்த ஹியூஸ் கீழே சரிந்தது விழுந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இரண்டு நாட்களுப் பின் 27-ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு ஆஸ்திரேலியா மட்டுமல்ல கிரிக்கெட் கிரிக்கெட் உலகமே கண்ணீர் வடித்தது. இவரின் மரணத்தை கிரிக்கெட் வீரர்கள் எளிதில் மறக்க முடியாது.
1988-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்த ஹியூஸ், சிறுவயதில் ரக்பி வீரராக இருந்து, பின்னாளில் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை வளர்த்துக் கொண்டார். ஆஸ்திரேலி அணிக்காக 26 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடி இருந்தார்.
கிரிக்கெட் மைதானத்தில் ஒவ்வொரு வீரரும் ஹெல்மெட் அணியும் போதும், பவுன்சர்களை எதிர்கொள்ளும்போது அவர்களின் நினைவில் பிலிப் ஹியூஸ் செல்வார் என்பதை மறுக்க முடியாது.