வயது சான்றிதழ் முறைகேடு செய்தால் இரண்டாண்டு தடை- வினோத் ராய் 1
பிசிசிஐ-யால் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இளைஞர்கள் பெரும்பாலானோர் போலி வயதுச் சான்றிதழ் கொடுத்து அணியில் சேர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.வயது சான்றிதழ் முறைகேடு செய்தால் இரண்டாண்டு தடை- வினோத் ராய்

இதுகுறித்து ஏற்கனவே டிராவிட் கவலை தெரிவித்திருந்தார். மேலும் இப்படி சேரும் வீரர்களுக்கு மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் இதுபோன்று தவறுகள் செய்யும் இளைஞர்களுக்கு இரண்டாண்டு தடைவிதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் அணி வீரர்கள் தேர்வு மோசடி தொடர்பாக ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லாவின் தனிப்பட்ட உதவியாளர்களில் ஒருவரான அக்ரம் சைஃபியை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்துள்ளது.
வயது சான்றிதழ் முறைகேடு செய்தால் இரண்டாண்டு தடை- வினோத் ராய் 2உத்தரப்பிரதேச மாநில அணியில் இடம் பெறுவதற்காக கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா என்பவர் அக்ரம் சைஃபியை அணுகியுள்ளார். இதுதொடர்பாக ஹிந்தி தொலைக்காட்சி ஒன்று ரகசிய ஸ்டிங் முறையில் தொலைபேசி மூலம் ராகுல் சர்மாவை பேச வைத்தது. அப்போது சைஃபி அணியில் ராகுல் சர்மா இடம் பெற வேண்டும் என்றால் பணம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அக்ரம் சைஃபியை சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக சிஓஏ நிர்வாகி வினோத் ராய், பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கன்னா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மோசடி தொடர்பாக அக்ரமிடம் விளக்கம் கேட்கப்படும். பின்னர் பிசிசிஐயால் நியமிக்கப்படும் விசாரணை ஆணையர் மூலம் விராசரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வயது சான்றிதழ் முறைகேடு செய்தால் இரண்டாண்டு தடை- வினோத் ராய் 3
பிசிசிஐ விதிகளின்படி இந்த புகார் தொடர்பாக 2 நாளில் விசாரணை ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். 15 நாள்களில் ஆணையர் அறிக்கை தர வேண்டும்.
பிசிசிû ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் கூறுகையில், இப்புகார் தொடர்பாக அனைத்து பேச்சு பதிவுகளும் ஆய்வு செய்யப்படும். அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

மேலும் வீரர்களுக்கு போலியான வயதுச் சான்றிகளையும் அக்ரம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் தன் மீதான புகார்களை அக்ரம் மறுத்துவிட்டார். உத்தரபிரதேச கிரிக்கெட்டில் வீரர் தேர்வு வெளிப்படையாக நடக்கிறது. எந்த விசாரணைக்கும் தயார் என்றார்.

ராஜிவ் சுக்லா இப்பிரச்னை தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *