இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 26 கல்லே-இல் தொடங்குகிறது . இலங்கை அணி தலைவர் சண்டிமால் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் . இது அந்த அணிக்கு மிகவும் பேரடியாக அமைந்தது . இந்தியா சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செல்லும் இந்த தொடரில் 3 டெஸ்ட் உட்பட 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 1 டி 20 போட்டியும் விளையாடுகிறார்கள் .
இலங்கை அணியின் மேலாளர் அசங்க குருசின்ஹா இந்த தகவலை இலங்கை ஊடகம் ஒன்றில் ஜூலை 21 உறுதி செய்தார் . 27 வயதான சண்டிமால் நீமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .
“சண்டிமால் காலை 9 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . கண்டிப்பாக சண்டிமால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் ” இதை அசங்க குருசின்ஹா இலங்கை ஊடகத்தில் தெரிவித்தார் .
கிடைத்த ஆரம்ப தகவல்களின் படி , வலக்கை மட்டை வீச்சு காரரான சண்டிமால் பதிலாக அனுபவம் வாய்ந்த இடக்கை சுழற் பந்து வீச்சு காரரான ரங்கனே ஹேரத் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வழி நடத்துவார் என தெரிகிறது .
” அதிகமா ரங்கனே ஹேரத் தான் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு கேப்டன் -ஆகா இருப்பார் , அவர் தலைமை பொறுப்பை இதற்கு முன்பாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் ” குருசின்ஹா இவ்வாறு தெரிவித்தார் .
இதுவரை அதிகார பூர்வமான தகவல் வரவில்லை , நாங்கள் கேப்டன் சண்டிமால் மாற்று யாரு என இது வரை முடிவு செய்யவில்லை எனவும் குருசின்ஹா தெரிவித்தார் .
“நாங்கள் இதுவரை இது குறித்து முடிவு எடுக்கவில்லை , நாங்கள் இது குறித்து கலந்து ஆலோசிப்போம் ” குருசின்ஹா
முன்னதாக , ஜிம்பாவாய் -இக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சண்டிமால் தலைமையிலான அணி ஜெயித்தது , ஆரம்பத்தில் அந்த ஆட்டம் இலங்கை அணிக்கு மிக கடினமாக தான் அமைந்தது . கடைசி நாள் ஆட்டம் இலங்கை -இக்கு சாதகமாக அமைந்தது . ஜிம்பாவாய் -இக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .

” உண்மையாக எங்களுக்கு சண்டிமால் உடல்நிலை குறித்து கொஞ்சம் மெதுவாக தான் தெரிய வந்தது , ரத்த பரிசோதனை முடிவும் மெதுவாகவே வந்தது ”
“காலை மருத்துவர் ஆலோசனை வழங்கினார் , சண்டிமால் முதல் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என ” இவ்வாறு குருசின்ஹா தனது பேட்டி -ஐ முடித்தார் .