இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்குள் தோனி எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனதால் அவர் அணியில் இடம்பெறுவது மேலும் தள்ளிச் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பேட்டிகளை சமூக வலைத்தளம் வாயிலாகவே கொடுத்து வருகின்றனர்.இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ 2

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான பிராவோ, தோனி குறித்து பேசியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளுருமான போம்மி பாங்வாவிடம் இன்ஸ்டாகிராமில் உரையாற்றிய பிராவோ, “சிஎஸ்கே அணியின் வெற்றிக்குப் பெரும் பங்கு தோனி மற்றும் பயிற்சியாளர் ஃபிளெமிங்கையே சேரும். அந்த அணியின் உரிமையாளர்களும் ஃபிளெமிங்கையும் தோனியையும் முழுவதுமாக நம்புகிறார்கள். அணி வீரர்களும் தோனி மீது அவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள். அந்த அணியின் சூழலே அழகானது” என்றார்.இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ 3

மேலும் தொடர்ந்த பிராவோ ” கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் தோனி. எங்கள் அணியிலும் அப்படித்தான். அவருடன் மிகச் சுலபமாக உங்களால் பேச முடியும். கிரிக்கெட் களத்துக்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு மிகவும் இயல்பாக இருப்பார் தோனி. அவர் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஆனால், தோனிதான் அவர்களில் எல்லோரை விடவும் மிக தன்னடக்கம் உடையவர். சிஎஸ்கே ஒரு ஸ்பெஷல் அணி. எங்களுக்குத்தான் மிக நம்பிக்கையான ரசிகர்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ 4

2011 ஆம் ஆண்டு முதல் பிராவோ, சிஎஸ்கே-வில்தான் விளையாடி வருகிறார். இதுவரை சிஎஸ்கேவுக்காக 104 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 121 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து பர்பிள் கேப் தட்டிச் சென்றதும் பிராவோதான்.

இதுவரை சிஎஸ்கே 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.இவர்கள் இருவரையும்தான் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : ஷாக் ஆன டிவைன் பிராவோ 5

கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து விலகியிருக்கும் 38 வயதான தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கம்-பேக் கொடுக்க இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டதால், தோனியின் கம்-பேக் தள்ளிப் போயுள்ளது.

சமீபத்தில் தோனி, இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில், அவரின் தடுப்பாட்டம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்தப் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *