‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் 1

புனேவில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை காண்பதற்காக  தனி ரயிலில் புனே புறப்பட்டுப் சென்றுள்ளனர் அந்த அணியின் ரசிகர்கள்.

காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் 2

2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் புனேவில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை காண விசில்போடு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புனேவுக்கு செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஒன்று புறப்பட்டது.‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் 3

அந்த ரயிலின் அனைத்து இருக்கைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களால் நிரப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ஆடையுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடியுடனும் ரசிகர்கள் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் அணியின் மீதான சென்னை ரசிகர்களின் அன்பு பாராட்டுக்குரியது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.‘‘போட்டியை புனேவுக்கு மாற்றினால் என்ன? - விசில்போடு எக்ஸ்பிரஸ் ’’ சென்னையில் இருந்து தனி ரயிலில் புறப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் 3

சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1,000 ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இன்று புனேவில் நடைபெறும் போட்டியை காண்பதற்காக சிறப்பு ரயிலில் இலவசமாக அழைத்து சென்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தின. அதை மீறி போட்டிகளை நடத்தினால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்திற்கொண்டு சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான சென்னையில் நடைபெறவேண்டிய போட்டி புனேவில் நடந்தாலும், அங்கு தனது அணியின் ரசிகர்கள் இருப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என்று அழைத்துக்கொள்ளும் ரயிலில் புனேவை நோக்கிய 21 மணிநேர பயணத்தை 1000 ரசிகர்கள் சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை துவக்கினர்.

ரசிகர்களை இலவசமாக புனேவுக்கு அழைத்துச்சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்தப் போட்டியை காண்பதற்காக ரயிலில் இலவசமாக அழைத்துச்செல்லப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு போட்டிக்கான டிக்கெட், உணவு மற்றும் இருப்பிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயலதிகாரியான காசி விஸ்வநாதன் கிரிக்இஃன்போ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *