பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் சிங் கெயில்!! அடைமழை பெய்ந்து தப்பித்தது சிஎஸ்கே!! ட்விட்டர் ரியாக்சன்! 1

ஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவிற்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டார்.

சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. முரளி விஜய், 4, டோனி, 5. சாம் பில்லிங்ஸ், 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. இம்ரான் தாஹிர், 11. சர்துல் தாகூர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு பரிந்தர் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. கேஎல் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. ஆரோன் பிஞ்ச், 5. யுவராஜ் சிங், 6. கருண் நாயர், 7. அஸ்வின், 8. அந்த்ரே டை, 9. பரிந்தர் சரண், 10. மோகித் சர்மா, 11. முஜீப் உர் ரஹ்மான்.பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் சிங் கெயில்!! அடைமழை பெய்ந்து தப்பித்தது சிஎஸ்கே!! ட்விட்டர் ரியாக்சன்! 2

கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹர் வீசினார். 2-வது பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணி 10 ரன்கள் சேர்த்தது.

அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். முதல் பந்தை கிறிஸ் கெய்ல் பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். 3-வது ஓவரை சாஹர் வீசினார். இதில் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி விரட்டினார்.

2 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்துள்ளது.பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் சிங் கெயில்!! அடைமழை பெய்ந்து தப்பித்தது சிஎஸ்கே!! ட்விட்டர் ரியாக்சன்! 3

4 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் விக்கெட் இழப்பின்றி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 39 ரன்களை எடுத்தது.

சிக்ஸர் மழை பொழியும் கிரிஸ் கெயில்…

மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிக்ஸர்களாக விளாசி வருகிறார் கிறிஸ் கெயில். 21 பந்துகளில் 46 ரன்களை எடுத்துள்ளார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

முதல் விக்கெட்டை பறிகொடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ராகுல்.

13 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.

 

https://twitter.com/Atheist_Krishna/status/985534922008899584

https://twitter.com/ibeing_devil/status/985540267880124416

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *