சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள மூன்று வீரர்கள் விவரம்!! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள மூன்று வீரர்கள் விவரம்!!

1.தோனி (கேப்டன்)

சென்னை சூப்பர் கிங்ஸ் பங்குபெற்ற 8 தொடர்களில் அனைத்திலும் இவர் தான் சென்னை அணியும் கேப்டன். இவரது தலைமையில் சென்னை அணி நிறைய சாதித்துள்ளது. 8 தொடர்களிலிம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே.

இன்று மாலை தக்க வைக்கும் சேதகக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு அணியுன் தங்ககை தக்க வைக்கும் வீர்ரகள் பெயரை அறிவிக்கும்.

ஆனால் அதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் தோனி, ரெய்னா, மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்களை தக்க வைப்பதாக அவர்களது ஜெர்சி என்னை வைத்து அறிவித்துவிட்டது.

அதிலும், 2010 மற்றும் 2011 ஆகிய தொடரிகளில் கோப்பையை வென்றுள்ளது சென்னை அணி. மேலும் 2010ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையுடன் சேர்த்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் கைப்பற்றினார் தோனி. ஒரே வருடத்தில் ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கொப்பளியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே.

இதற்கு தலைமை தாங்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது இந்த சிங்கம் தோனி தான். இதனா இவரை முதல் வீரராக தக்க வைத்துள்ளது சென்னை அணி. மேலும், ஐ.பி.எல் தொடரின் முதல் (First Cap Of IPL) வீரன் இவர் தான்.CSK, IPL, Cricket, Ms Dhoni, Meiyappan

பேட்டிங்கிலும் அசத்தி உள்ளார் தோனி, மொத்தம் 159 ஐ.பி.ளே போட்டிகளில் ஆடியும் தோனி , 3561 ரன்கள் குவித்துள்ளார். இதனால். இந்த தொடரில் தோனியின் பேட் விளையாடுவதை நாம் பார்க்கலாம்.

2.சுரேஷ் ரெய்னா

ஐ.பி.எல் போட்டிகளுக்கு என்றே அளவெடுத்து செய்ட்டப்பட்ட வீரன் இவர். ஐ.பி.எல் தொடரில் எப்போதும் 300+ ரன்கள் அடித்துவிடுவார். தற்போது பார்மில் இல்லை என்றாலும் ஐ.பி.எல் தொடரில் கில்லியாக பாய்ந்த டிக்கட் கூடியவர்.

பீல்டிங்கில் எப்போதும் அசத்துவார் ரெய்னா. 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக ப்ளே ஆப் சுற்றில் ரெய்னா ஆடிய அந்த ஆட்டம் யாரால் மறக்க முடியும். 25 பந்துகளுக்கு 87 றன் குவித்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டார் ரெய்னா. இல்லை எனில் கிரிக்கெட் வரலாற்றை அன்று மாற்றி எழுதியிருப்பார் ரெய்னா.Suresh Raina

தற்போது வரை 161 ஐ.பி.எல் போட்டிகளில் 4540 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 32 அராய் சதங்கள் அடங்கும். 68 போட்டிகளில் பந்து வீசி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரெய்னா. இதனால் இவரை தக்க வைத்துள்ளது சென்னை அணி

3.ஜடேஜா

தனது 19 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடிய ஜடேஜா பின்னர் 2010ல் கொச்சி அணிக்கு ஆபி ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தார். அதன் பின்னர் சென்னை என்றாலே ஜடேஜா இல்லாத அணியாக மாறிவிட்டது. இந்தியாவின் ஒரு சிறந்த ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டரான திகழ்ந்து வருகிறார் ஜடேஜா.

இந்தியாவின் ஒருநாள் மட்டும் டி20 அணியில் இல்லையோ என்றால் கூட உள்ளூர் போட்டிகளில் அசத்தி வருகிறார். சமீபத்தில் கூட மாவட்ட அளவிலான டி20 போட்டியில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர் அடித்து துவம்சம் செய்தார். நல்ல பார்மில் இருக்கு ஜடேஜாவை சென்னை அணி மூன்றாவது வீரராக தக்க வைக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள மூன்று வீரர்கள் விவரம்!! 2

அஸ்வின், பிராவோ, டு பிலேசிஸ், மெக்கல்லம் போன்ற வீரகளை RTM அல்லது ஏலத்தில் எடுக்க மூடு செய்துள்ளது சென்னை அணி.

சென்னை அணி தக்க வைத்திருக்கலாம் என நீங்கள் நினைக்கும் வீரர்களின் பெயரை கமெண்டில் பதிவுடவும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *