தோனியுடன் பேசும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரை கிண்டல் செய்யும் விதமான கருத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளம் மூலமாக ரசிகர்களிடையே உரையாற்றி வருகின்றனர். இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் படு ஆக்டிவாக இருப்பார்.
அண்மையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2008-இல் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதில் “ஹே தோனி, நீங்கள் ஏன் எனக்காக அந்த இடத்தில் பீல்டர் ஒருவரை நிற்க வைக்கலாமே, உங்களுக்கு எதிராக ரன்களை குவிப்பது எளிதாக இருக்கிறது” என பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் பீட்டர்சனை கலாய்த்து வந்தனர். ஆனால் இதற்கு தகுந்த பதிலடியாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சரியான முறையில் பீட்டர்சனை பழிவாங்கியது சிஎஸ்கே நிர்வாகம்
பீட்டர்சன் பதிவிட்டிருந்த புகைப்படத்தின் கீழ் தோனியிடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிஎஸ்கே தனது பதிலில் “சில நேரங்களில் சிலருக்கு பீல்டர்களே தேவையில்லை” என்று நக்கலாக பதிவிட்டுள்ளது. சிஎஸ்கேவின் இந்த ட்விட்டர் பதிலை சிஎஸ்கே ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி பீட்டர்சனை கிண்டலடித்து வருகின்றனர்.
“Hey, MSD, why don’t you put a fielder over there for me? Scoring runs against you guys is so easy…!”? pic.twitter.com/OKVukkkSQD
— Kevin Pietersen? (@KP24) April 18, 2020
But sometimes you don't need fielders! ? pic.twitter.com/3gHMTo2zqe
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2020