பெங்களூருவில் உள்ள மைதானத்தின் பவுண்டரி கோடுகள் சின்னதாகவே இருப்பதால் அது பேட்ஸ்மேனின் கோட்டை, இதனால் அந்த மைதானத்தில் ரன் வேட்டை எப்போதுமே இருக்கும்.
ஆனால், கடந்த ஒரு வருடத்தில் எல்லாமே மாறி விட்டது, இதனால் அந்த மைதானத்தில் அவ்வுளவு சீக்கிரம் ரன் வேட்டையை தொடரமுடியாது. ஆனால், இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு மைதானத்தை சிறப்பாக மாற்றியுள்ளார்கள்.
“தற்போது இந்த போட்டியில் ரன் வேட்டை இருக்கும் என என்னால் சரியாக கூற முடியாது. ஆனால், ஒரு நல்ல பிட்ச்சாக இருக்கும். ஐபில்-இன் போது கூட இப்படி தான் இருந்தது, ஆனால் எந்த அணிகளும் புகார் கூறவில்லை,” என அந்த மைதானத்தின் பொறுப்பாளர் கூறினார்.
கடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சராசரியாக 150யில் இருந்து 200 வரை ரன்கள் அடித்தார்கள். அதே தான் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியிலும் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி தாறுமாறாக விளையாடி 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரை ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்த போட்டி பெங்களுருவில் நடக்கவுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை இருக்கும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், அந்த போட்டி முழுவதுமாக விளையாடாமல் போக வாய்ப்புள்ளது.