உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 1
India's Rohit Sharma (C) smiles after receiving the man of the match award following victory the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

12-வது உலகக்கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக வென்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் சேர்த்து சமனில் முடிந்தது. பவுண்டரி அதிகமாக அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்த நிலையில், நியூஸிலந்து 17 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தது.

 

உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 2

பரிசுத் தொகை

உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.28கோடி) வழங்கப்பட்டது.

2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணிக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.14 கோடிபரிசு) பரிசு வழங்கப்பட்டது. அரையிறுதிவரை வந்து தோல்வி அடைந்த, இந்திய அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் தலா ரூ.5.6 கோடி பரிசு வழங்கப்பட்டது.

தொடர்நாயகன் விருது

12-வது உலகக் கோப்பைப் போட்டியின் தொடர் நாயகன் விருது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 578 ரன்கள் சேர்த்த வில்லியம்ஸன், சராசரி 82. ரன்களாக வைத்துள்ளார்.உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 3

ஆட்டநாயகன் விருது

இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் செய்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இறுதி 50 ஓவர் ஆட்டத்தில் 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டோக்ஸ் சூப்பர் ஓவரில் 12 ரன்கள் சேர்த்தார். இவர் நியூஸிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கடந்த 2007-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியின் போது, அயர்லாந்து அணியில் ஆடினார். அதன்பின் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக வந்து கோப்பையை வென்று கொடுத்தார்.உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 4

பேட்டிங் சாதனைகள்:

  • உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமான ரன்கள் குவித்த பெருமையை இந்திய அணியின் ரோஹித் சர்மா 648 ரன்கள் சேர்த்து பெற்றுள்ளார்.
  • இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் 300 ரன்களுக்கு மேல் 26 முறை அடிக்கப்பட்டுள்ளன.
  • இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 166 ரன்கள் சேர்த்தார்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்சமாக அணியின் ஸ்கோராக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்தது.
  • அதிகமான சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
  • அதிகபட்ச பவுண்டரிகள் அடித்தவரிசையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணியின் ஜேஸன் ராய் தலா 67 பவுண்டரிகள் அடித்து முன்னணியில் உள்ளனர்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச சராசரியாக வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 86.57 ரன்கள் வைத்துள்ளார்.
  • அதிகமான சதங்கள் அடித்த வரிசையில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 5 சதங்களும், அதில் தொடர்ச்சியாக 3 சதங்களும் அடித்துள்ளார்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து அரைசதங்கள் அடித்தவகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் உள்ளனர்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் அதிகஅரைசதங்கள் அடித்தவரிசையில் சகிப் அல் ஹசன் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமான பந்துகளைச் சந்தித்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் கேன் வில்லியம்ஸன் 771 பந்துகைச் சந்தித்துள்ளார்.உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 5

பந்துவீச்சு சாதனைகள்

  • உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை ஆஸி. வீரர் மிட்ஷெல் ஸாட்ர்க் வீழ்த்தினார். இவர் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக பாகிஸ்தான் அணியின் ஷாகீன் ஷா அப்ரிடி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • குறைந்த ஆட்டங்களில் சிறந்த பந்துவீச்சு சராசரியாக இந்திய அணியன் முகமது ஷமி 4 ஆட்டங்களில் 13.79 சராசரி வைத்துள்ளார்.
  • அதிகமான மெய்டன் ஓவர்கள் வீசியவகையில், இந்தியஅணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 9 மெய்டன் ஓவர்கள் வீசி முதலிடத்தில் உள்ளார்.

உலககோப்பை தொடரில் அதிக ரன், விக்கெட்... நிகழ்த்தப்பட்ட மொத்த சாதனைகளின் தொகுப்பு! 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *