உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது !!

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணியை, விண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. அடுத்ததாக ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி இல்லாமல் டாப் 7 ல் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

எஞ்சியுள்ள இரண்டு  இடங்களுக்கான உலக்கக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் வரும் மார்ச் மாதம் 4ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை, வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த விண்டீஸ் அணி, இன்று தகுதிச்சுற்றுக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

இதில் கெய்ல், சாமுவேல்ஸ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணியில் இடம்பிடித்திருந்தாலும், பிராவோ, பொல்லார்டு, நரைன், அண்ட்ரீயூ ரசல் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.

இது குறித்து பேசிய விண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகி,  அனுபவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், இளம் வீரர்கள் பலருக்கும் அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளோம். சாமுவேல்ஸ் மற்றும் கெய்ல் அணியில் இருப்பது இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். பிரவோ, பொலார்டு, ரசல் மற்றும் நரைன் உலகக்கோப்பை தகுதிச்சுற்று நடைபெறும் நேரத்தில் பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதால் அவர்களால் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க முடியாவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணி.,

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஜேஸன் முகமது, தேவேந்திர பிச்சூ,  கார்லஸ் ப்ராத்வொய்ட், செல்டன், கிறிஸ் கெய்ல், சிம்ரோன் ஹெடெம்யெர், சாய் ஹோப், இவின் லீவிஸ், நிகிடா மில்லர், ஆஷ்லே நர்ஸ், ரோவமன் பவல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

Mohamed:

This website uses cookies.