மீண்டும் வருவது சந்தேகம்!! டேல் ஸ்டெய்ன் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு மீண்டும் வந்து ஆடுவது சந்தேகம் போல உள்ளது. அதற்கு இன்னும் கடுமையாஹா உழைக்க வேண்டும் என கூறியுள்ளார் டேல் ஸ்டெய்.

என்னால் 12 முதல் 15 ஓவர்கள் வரை வீச முடியும் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அது போதாது. நான் இன்னும் ஒரு மாதம் உழைக்க போகிறேன். ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. அதனால் இங்கிலாந்தி சென்று கவுண்ட்டி ஆட போகிறேன் என கூறினார் ஸ்டெய்ன்.
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா கவாஜா அரைசதம் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. டிம் பெய்ன் 5 ரன்னுடனும், பேட் கம்மின்ஸ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிம் பெய்ன், கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவராலும் அரைசதங்கள்தான் அடிக்க முடிந்தது. பெய்ன் 62 ரன்னிலும், கம்மின்ஸ் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லயன் 8 ரன்னிலும், சேயர்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 221 ரன்னில் ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.
ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மார்கிராம் 37 ரன்னிலும், அடுத்து வந்த அம்லா 16 ரன்னிலும், ஏபி டி வில்லியர்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கருடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வதுநாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்து விளையாடிது. 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், டு பிளிசிஸ் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போதுவரை தென்ஆப்பிரிக்கா 401 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை பாதிநேரம் வரை விளையாடி சுமார் 500 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்று டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. 500 ரன்கள் இலக்கு என்பது முடியாது காரியம். இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக்கைப்பற்ற வாய்ப்புள்ளது.