தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஒரு வருடம் கழித்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் ரேம் ஸ்லாம் டி20 சேலஞ் தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன். நவம்பர் 15ஆம் தேதி நைட்ஸ் அணியுடன் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியின் போது டைட்டன்ஸ் அணிக்காக டேல் ஸ்டெய்ன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.
அவர் கடைசியாக ஒரு வருடத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடினார். கடைசியாக நவம்பர் 16ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எலும்பு முறிந்ததால், அவர் கிரிக்கெட் விளையாடவில்லை.
இந்த போட்டியில் களமிறங்குவது பற்றி டேல் ஸ்டெய்ன் பேசினார். “நான் ரெடியாக இருக்கிறேன். ஆமாம், நான் ஒரு வருடம் விளையாடவில்லை. ஆனால், நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் கிரிக்கெட் விளையாடி அந்த சந்தோசத்தை அனுபவிக்க காத்திருக்கிறேன்,” என டேல் ஸ்டெய்ன் தெரிவித்தார்.
“நான் மீண்டும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் எடுப்பேன் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். நான் முழு போட்டியும் விளையாடி, அந்த காயமும் படாமல், ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் எடுத்தாலே போதும்,” என டேல் ஸ்டெய்ன் கூறினார்.
டைட்டன்ஸ் – நைட்ஸ் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். நைட்ஸ் அணி கடந்த போட்டியில் வாரியர்ஸ் அணியை அசால்ட்டாக தூக்கி போட்டு விட்டது. அந்த அணியின் பிருப்யன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தெறி பார்மில் உள்ளார்கள். வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் மில்லர் அதிவேக டி20 சதம் அடித்து அசத்தினார்.
“முதல் 10 – 15 பந்துகள் டேவிட் மில்லருக்கு சிரமம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர் அனைத்து பந்தையும் அடிக்க நினைப்பார். இந்த மைதானமும் மிக சிறியது, பந்தும் வேகமாக ஓடும். இதனால், மீண்டும் ஒரு பெரிய-ஸ்கோர் போட்டியை எதிர்பார்க்கலாம். ஆனால், பெரிய ஸ்கோர் அதிக விடாமல் விக்கெட் எடுத்து சிரமம் கொடுக்க முயற்சிப்போம்,” என ஸ்டெய்ன் கூறினார்.
கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற டைட்டன்ஸ் அணி லயன்ஸ் அணிக்கு எதிராக வெற்றியை தொடரியது. தனது 300வது டி20 போட்டியை விளையாடிய கேப்டன் ஆல்பி மோர்கெல், 3 விக்கெட் எடுத்தது மட்டும் அல்லாமல், 16 பந்துகளில் 41 ரன் அடித்து அசத்தினார். ஏபி டி வில்லியர்ஸ் அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார்.
“உங்கள் அணியில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் குவிண்டன் டி காக் போன்ற வீரர்கள் இருக்கும் போது, நீங்கள் கவலை பட தேவை இல்லை. எதிரணிக்கு சிரமம் தர இவர்களே போதும். இவர்கள் இல்லாமல், ஆல்பி மோர்கெல் தன் பங்குக்கு விக்கெட் மற்றும் சில நல்ல இன்னிங்ஸ் விளையாடுவார்,” என ஸ்டெய்ன் தெரிவித்தார்.