செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டேல் ஸ்டெய்ன் புதிய தென் ஆப்பிரிக்க பவுலிங் சாதனையை நிகழ்த்தினார்.
88 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய டேல் ஸ்டெய்ன், இந்த முதல் டெஸ்ட் போட்டியின் 7வது ஓவரில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் (12) விக்கெட்டை வீழ்த்தி 422 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஷான் போலாக் சாதனைய முறியடித்து அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பவுலரகா நம்பர் 1 இடத்துக்குச் சென்றார்.
இடது கை வீரரான பகர் ஜமானுக்கு ஒரு பந்தை அவரது உடலுக்குக் குறுக்காக செலுத்தினார் டேல் ஸ்டெய்ன் பந்து எட்ஜ் ஆனது. டீன் எல்கர் கேட்ச் எடுக்க சாதனை பவுலருக்கு சாதனை விக்கெட்டாக வீழ்ந்தார் ஃபகர் ஜமான்.

ஷான் போலக் 108 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளைக் கைப்பற்ற டேல் ஸ்டெய்ன் 88 டெஸ்ட் போட்டிகளில் இதனைச் சமன் செய்து தற்போது 89வது டெஸ்ட் போட்டியில் போலாக்கை முறியடித்து தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பவுலர் ஆனார்.
போலாக் சாதனையை முறியடிக்க 5 விக்கெட்டுகளே இருந்த போது ஆஸ்திரேலியா தொடரில் 2016-ல் தோள்பட்டையில் காயமடைந்தார். அது உடைந்த தோள்பட்டையே, பலரும் ஸ்டெய்ன் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று முடிவு கட்டிவிட்டனர், ஆனால் கடின உழைப்பால் மீண்டும் வந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்த 422 விக்கெட்டுகளை டேல் ஸ்டெய்ன் 6வது சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டான 42.0-வில் எடுத்துள்ளார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்து தற்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ரன்கள் என்று தட்டுத்தடுமாறி வருகிறது. அசார் அல் 22 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடித்தால் போதாது, மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். 35 வயதாகும் இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை புரிந்து இருந்தார். தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.
கடந்த முன்றரை ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணியில் தொடர்ச்சியான இடம்பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை சமன் செய்ய முடிந்தது.
நாளை தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டியில் ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.
ஆனால், ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைவிட அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஒரு விக்கெட் பெறுவதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும். பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. பெரிய இலக்காக இருக்க வேண்டும்.
அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக இருக்கும். இதுபோன்ற சாதனைகள் படைப்பது கவுரவம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும். ஆனால், சாதனையை முறியடித்த பிறகு, மேலும் ஒரு சாதனை படைக்க முயற்சி செய்வேன். இதுதான் எனது திட்டம்’’ என்றார்.