டி20 போட்டியில் அதிவேக சதம் அடித்தார் டேவிட் மில்லர்

தற்போது தென்னாபிரிக்கா அணி வங்கதேச அணியுடன் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இரண்டாவது டி20 போட்டியில் 35 பந்தில் சதம் அடித்து அசத்தினார் டேவிட் மில்லர். சர்வதேச டி20 அரங்கில் அதிவேக சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர்.

இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது வங்கதேச அணி. மற்ற வேலைகளை தென்னாபிரிக்காவின் பேட்ஸ்மேன்கள் பார்த்து கொண்டார்கள். ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஹசிம் ஆம்லா 51 பந்தில் 85 ரன் எடுத்து அவுட் ஆனார்.

ஆனால், அதன் பிறகு ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் வங்கதேச பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தார். தன் அதிரடியை காட்டிய மில்லர் வெறும் 35 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசி அசத்தினார். 19வது ஓவரில் சைபுதீன் வீசிய ஓவரில் முதல் 5 பந்துகளை சிக்ஸர் விளாசிய மில்லர், 6வது பந்தில் சிங்கள் அடித்து, யுவராஜ் சாதனையை சமன் செய்ய தவறினார். ஆனால், இவர்களின் அதிரடி ஆட்டத்தால் தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 224 ரன் சேர்த்தது.

சர்வதேச டி20 அரங்கில் அதிவேக சதம் அடித்தவர்கள்:

1. டேவிட் மில்லர் – 35 பந்து vs வங்கதேசம்
2. ரிச்சர்ட் லெவி – 45 பந்து vs நியூஸிலாந்து
3. பாப் டு பிளெஸ்ஸிஸ் – 46 பந்து vs வெஸ்ட் இண்டீஸ்
4. லோகேஷ் ராகுல் – 46 பந்து vs வெஸ்ட் இண்டீஸ்
5. ஆரோன் பின்ச் – 47 பந்து vs இங்கிலாந்து
6. கிறிஸ் கெய்ல் – 47 பந்து vs இங்கிலாந்து
7. எவின் லெவிஸ் – 48 பந்து vs இந்தியா
8. கிளென் மேக்ஸ்வெல் – 49 பந்து vs இலங்கை
9. கிறிஸ் கெய்ல் – 50 பந்து vs தென்னாபிரிக்கா
10. பிரண்டன் மெக்கல்லம் – 50 பந்து vs ஆஸ்திரேலியா

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.