தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக டேவிட் வார்னர் ஒரு வருடம் கிரிக்கெட் ஆடுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கிடம் “ஒருமுறை தான் பந்தை சேதப்படுத்த பொருட்கள் பயன்படுத்தியதாக வார்னர் கூறியுள்ளார்”. கார்டியனில் வெளியான நேர்காணலில், குக் 2017-18 ஆஷஸ் தொடரில் நடந்த இந்த சம்பவம் குறித்து தன்னுடைய “சுயசரிதை” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“டேவிட் வார்னர் தன்னுடைய கொண்டாட்டத்தின் போது, முதல் தர போட்டியில், கையிலிருந்த பொருட்கள் வைத்து பந்தை சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். நான் ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்தேன். அவர் ‘ ஓ அதை நீங்கள் சொல்லியிருக்க கூடாது’ என்பது போல் பார்த்தார்,” என்று குக் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

After David Warner proved his mettle in the 50-overs format during World Cup 2019, everyone expected him to score plenty of runs in the Ashes series but he has failed so far.

சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியதிலிருந்து டேவிட் வார்னர், 2019 உலகக் கோப்பை மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் 2019 முழுவதும் கிண்டல்கள் மற்றும் முரட்டுத்தனமான ஸ்லெட்களை சந்தித்து வருகிறார்.

வார்னர் இந்த பிரச்னையெல்லாம் முறியடித்து, உலகக் கோப்பையில் 647 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரை அதிக ரன்கள் குவித்த இரண்டாவது நபராக உள்ளார். இந்திய அணியின் ரோஹித் ஷர்மாவை விட ஒரு ரன் பின் தங்கியுள்ளார்.

Australian batsmen David Warner and Marnus Labuschagne run between the wickets during day one of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 22, 2019 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)

உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர், ஆஷஸ் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ் ஆடி, 2, 8, 3, 5, 61, 0, 0 மற்றும் 0 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ஆஷஸ் 2019 இன் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி செப்டம்பர் 12 ஆம் தேதி லண்டனின் கென்னிங்டன் ஓவலில் தொடங்குகிறது. 2001ம் ஆண்டு முதல் தோற்காத இங்கிலாந்து அணி, இதில் வெற்றி பெறும் முனைப்போடு ஆடவுள்ளது. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...