நான் மீண்டும் பார்முக்கு வர இவர்தான் காரணம்: உருகும் டேவிட் வார்னர் 1

தனக்கு ரிக்கி பாண்டிங் எவ்வாறு உதவியுள்ளார் என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி ஒராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தடை முடிந்த பிறகு டேவிட் வார்னர் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் மீண்டும் களமிறங்கினார். அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இருந்தார்.

நான் மீண்டும் பார்முக்கு வர இவர்தான் காரணம்: உருகும் டேவிட் வார்னர் 2
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 22: David Warner of Australia raises his bat as he leaves the ground at stumps on 151 not out during day two of the 1st Domain Test between Australia and Pakistan at The Gabba on November 22, 2019 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

அந்த நேரத்தில் ரிக்கி பாண்டிங் தனக்கு எவ்வாறு உதவி செய்தார் என்பது தொடர்பாக டேவிட் வார்னர் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து, “உலகக் கோப்பை தொடரில் என்னுடன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அவர் ஒரு வயதான அனுபவம் வாய்ந்த நபர் போன்று எனக்கு உதவியாக இருந்தார். குறிப்பாக ஒராண்டு தடைக்காலத்திற்கு பிறகு நான் உலகக் கோப்பை தொடரில் தான் களமிறங்கினேன். அப்போது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு அவர் தகுந்த பக்க பலமாக இருந்தார். அந்தத் தொடரின் போது நான் அவருடன் எப்போதும் விவாதித்து கொண்டே இருந்தேன்” எனத் தெரிவித்தார்.

2019 கிரிக்கெட் உலகக் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 645 ரன்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

நான் மீண்டும் பார்முக்கு வர இவர்தான் காரணம்: உருகும் டேவிட் வார்னர் 3
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 22: David Warner of Australia bats during day two of the 1st Domain Test between Australia and Pakistan at The Gabba on November 22, 2019 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

அத்துடன் அந்த உலகக் கோப்பை தொடரில் அவர் 3 சதங்களையும் அடித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “தடைக்கு பின்பு ஒருவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவது மிகவும் கடினமான ஒன்று. ஆகவே தான் நான் டேவிட் வார்னருடன் இணைந்து செயல்பட்டேன். டேவிட் வார்னர் ஒரு சிறப்பான வீரர். அவர் ஒரு போராளி. இதை தான் நான் அவரிடம் தொடர்ந்து கூறி வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *