டேவிட் வார்னர் தேர்வு செய்த தலை சிறந்த ஐபிஎல் அணி: கேப்டன் யார் தெரியுமா? 1

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை வார்னர் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிரடி பேட்ஸ்மேனான இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்தில் தலைசிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.டேவிட் வார்னர் தேர்வு செய்த தலை சிறந்த ஐபிஎல் அணி: கேப்டன் யார் தெரியுமா? 2

பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐந்தாவது இடத்தையும், கிளென் மேக்ஸ்வெல்லுக்கு 6–வது இடத்தையும் வழங்கியுள்ளார். எம்எஸ் டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள வார்னர், அவருக்கு 7-வது இடத்தை ஒதுக்கியுள்ளார்.

தொடக்க வீரராக அவரையும், ரோகித் சர்மாவையும் தேர்ந்தெடுத்துள்ளார். 3-வது இடத்திற்கு விராட் கோலியையும், 4-வது இடத்திற்கு ரெய்னாவையும் தேர்வு செய்தள்ளார்.

மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்தள்ளார். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.டேவிட் வார்னர் தேர்வு செய்த தலை சிறந்த ஐபிஎல் அணி: கேப்டன் யார் தெரியுமா? 3

அதேநேரம் ஐபிர்ல் கிரிக்கெட் தொடரில் அதிகளவில் பங்கேற்காத ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கையும் வார்னர் சேர்ந்த்துள்ளார். ஸ்டாக் கடந்த 2015 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் அதே நேரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்காவை வார்னர் புறக்கணித்துள்ளார்.

ஸ்டார்க் வெறும் 27 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அதே நேரம் 2020 ஐபில் தொடரில் இருந்து விலகிய ஸ்டார்க், 2019 வீரர்களுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. முன்னதாக 2018 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்டார்க் காயம் காரணமாக விலகினார்.டேவிட் வார்னர் தேர்வு செய்த தலை சிறந்த ஐபிஎல் அணி: கேப்டன் யார் தெரியுமா? 4

டேவிட் வார்னரின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன் :

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்ட்யா, க்ளென் மேக்ஸ்வெல், எம்.எஸ்.தோனி, மிட்செல் ஸ்டார்க், ஜஸ்பிரீத் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, குல்தீப் யாதவ் / யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *