இந்த காலத்தில் இந்த 3 பேர் தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர் தடாலடி பேச்சு 1

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தற்போதைய காலக்கட்டத்தின் தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள்ளேயே இருக்கும் வீரர்கள் லைவ் சாட் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நியூசிலாந்து அணி கேப்டனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேனும் ஆன கேன் வில்லியம்சனுடன் இன்ஸ்டாகிராம் லைவ் செசன் மூலம் கருத்துக்கனை பகிர்ந்து கொண்டார்.

இந்த காலத்தில் இந்த 3 பேர் தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர் தடாலடி பேச்சு 2
BRISBANE, AUSTRALIA – NOVEMBER 22: David Warner of Australia raises his bat as he leaves the ground at stumps on 151 not out during day two of the 1st Domain Test between Australia and Pakistan at The Gabba on November 22, 2019 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

அப்போது டேவிட் வார்னர் ‘‘உங்களை (கேன் வில்லியம்சன்), ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி ஆகியோரை தலைசிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன்’’ என்றார்.

அதேபோல் கேன் வில்லியம்சன் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போது உணர்ச்சிவசப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘அது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டது சரியானதுதான்’’ என்றார்.

இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில்,“இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது டிவிலியர்ஸ் போன்ற ஒரு வீரர், தற்போது உள்ளூர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் ஆசிர்வதிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். எனது காலத்தின் ஸ்பெஷல் வீரர் டிவிலியர்ஸ்.

 

இந்த காலத்தில் இந்த 3 பேர் தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர் தடாலடி பேச்சு 3
அதே நேரம் சில தரமான வீரர்களும் உள்ளனர். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் கோலி மிகச்சிறந்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பசி அவரிடம் உள்ளது. கோலியின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதேநேரம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் உள்ளது. அவர் எங்கயோ உச்சத்தில் இருக்கிறார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *